• Fri. Apr 17th, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு..,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாநில செயலாளரும், அதிமுக வேட்பாளருமான டாக்டர் வி.பி.பி.பரமசிவத்தை ஆதரித்து பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசிய போது கூறியதாவது:

வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதியில் இரட்டை இலை வெற்றி பெற்று பெரும் சரித்திரத்தை படைக்க வேண்டும்.

சிறு குழந்தைகள் முதல் 70 வயதுக்கு மேற்பட்டவர்களின் அன்பைப் பெற்றவர்கள் திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் மற்றொருவர் திண்டுக்கல் சீனிவாசன் ஆவார்.

வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியை பொருத்தவரை 2016 முதல் 2021 வரை சட்டமன்ற உறுப்பினராக சிறப்பாக பணியாற்றியவர் டாக்டர் வி.வி.வி.பரமசிவம் ஆவார். 2021 முதல் 2026 வரை திமுக ஆட்சியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் மக்கள் பணி எதையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்காததால் அந்தக் கட்சியை போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்கவில்லை.

வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் டாக்டர் வி.பி.பி.பரமசிவம் பதவியில் இருந்த போதும் இல்லாத போதும் தொகுதி முழுவதும் பல்வேறு மருத்துவ முகாம்களை இலவசமாக நடத்திய மனிதநேயமிக்க மருத்துவர் ஆவார். இவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் 40 ஆண்டு கால கோரிக்கையான குஜிலியம்பாறை ஒன்றியத்தை தனி தாலுகாவாக அறிவிக்க சட்டமன்றத்தில் பேசி தனி தாலுகாவாக அறிவிக்க செய்தார்.

மே 4 ம் தேதிக்கு பிறகு முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்ற உடன் ஒரு டிஎம்சி காவிரி தண்ணீரை கொண்டு வந்து வேடசந்தூர் தொகுதி முழுவதும் அனைத்து குலங்களுக்கும் நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

அதிமுக வேட்பாளர் டாக்டர் பரமசிவம் அவர்களின் தந்தை பாலசுப்பிரமணி கடந்த 1980 ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது வேடசந்தூர் பகுதியில் பல்வேறு தொழிற்சாலைகளை கொண்டு வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தார். வேடசந்தூர் தொகுதியை தொழில் நகரமாக மாற்றிய பெருமை அவரை சாரும்.

பாராளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறினால் தமிழகத்திற்கு அதிக அளவு பாராளுமன்ற தொகுதி ஒதுக்கப்படும். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு எம்பி குறைந்துவிடும் என்று பொய்யான கருத்தை கூறி வருகிறார்.

திமுக ஆட்சியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக சட்ட ஒழுங்கு எவ்வளவு மோசமாக இருந்தது என்பது மக்களாகிய உங்களுக்கு தெரியும். பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை வழக்குகள் 2080 வழக்குகள் பதிவாகியுள்ளது. படுகொலை வழக்குகள் 8008 வழக்குகள் பதிவாகியுள்ளது.

பிரதர் மோடி பேசும்போது மறைந்த ஜெயலலிதாவிடம் எனக்கு பிடித்த விஷயம் தமிழகத்தை சட்டம் ஒழுங்கை சிறப்பாக வைத்திருப்பார் என்று கூறினார்.

ஆனால் திமுக ஆட்சி வந்த உடன் தான் அதிகளவு கூட்டு பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது.

திமுக ஆட்சி வந்த உடன் எந்த சகோதரிகளுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை உருவானது.

வருகின்ற 23ஆம் தேதி வாக்களிக்கும் போது எந்த காலத்தைக் கொண்டும் திமுகவுக்கு யாரும் வாக்களிக்கக் கூடாது.

சட்டம் ஒழுங்கை சீர்படுத்த வருகின்ற மே 4 ம் தேதிக்கு பிறகு தமிழகத்தில் முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்க வேண்டும்.

வேடசந்தூர் குடகனாறு ஆற்றின் வழியாக மலை வள்ளநீர் சென்று அமராவதி மற்றும் காவிரி ஆற்றில் கலக்கும் இதனால் ஆறு பகுதியில் நிலத்தடி நீர் பற்ற உயர்ந்து வேடசந்தூர் பகுதியில் விவசாயிகள் பயன்பெற்று வந்தார்கள்.
வழக்கமாக வரவேண்டிய தண்ணீரை 12 அடி உயர தடுப்புச் சுவர் கட்டி திண்டுக்கல் மாவட்டத்தின் ஒரு திமுக அமைச்சர் சத்தமே இல்லாமல் எங்கேயோ மாற்றிக் கொண்டு சென்று விட்டார். இதனால் வேடசந்தூர் பகுதி விவசாயிகளுக்காக குடகனாறு ஆற்றில் வரவேண்டிய தண்ணீர் வராது தான் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதை எதிர்த்து இன்று அதிமுக வேட்பாளர் டாக்டர் பரமசிவம் மட்டும் தான் குரல் எழுப்ப முடியும் விவசாயிகளுக்கு சேர வேண்டிய தண்ணீரை பெற்றுக் கொடுக்க முடியும்.

திமுக அமைச்சர் பெரியசாமி திண்டுக்கல் மாவட்டத்தில் ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். அவரது மகன் செந்தில்குமார் திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். திண்டுக்கல் மாவட்டத்தில் அப்பா மகன் குடும்ப ஆட்சி நடக்கிறது கோபாலபுரத்திலும் குடும்ப ஆட்சி நடக்கிறது இந்த குடும்ப ஆட்சிகளை மாற்றுவதற்கு மக்களாகிய நீங்கள் தான் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்.

வேடசந்தூர் பஸ் நிலைய பிரச்சினை மற்றும் ஏரியோடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் பிரச்சனைகளை சரி செய்வோம்.

வேடசந்தூர் தொகுதியில் கடந்த முறை திமுக தேர்தல் வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டு எந்த வாக்குறுதியும் நிறைவேற்ற வில்லை. அதுபோல திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறிய தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வில்லை.

வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் டாக்டர் வி.பி.பி.பரமசிவம் மற்றும் திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

பிரச்சாரத்தின் போது முன்னாள் அமைச்சரும், திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளருமான திண்டுக்கல் சீனிவாசன், பாஜக மாவட்ட தலைவர் ஜெயராமன், முன்னாள் மாவட்ட தலைவர் பழனி கனகராஜ், அதிமுக ஒன்றிய செயலாளர்கள் ஜான் போஸ், மலர்மன்னன், பழனியம்மாள், நகர செயலாளர் பாபு சேட், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் சேட்டை கார்த்திக் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர்.