திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே தேர்தல் பிரச்சாரத்தின் போது மயங்கி விழுந்த பெண்ணுக்கு அதிமுக வேட்பாளர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம் முதலுதவி சிகிச்சை அளித்தார்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம் கிராமம் கிராமமாக சென்று பொது மக்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு தீவிரமாக வாக்குச் சேர்த்து வருகிறார்.
இந்நிலையில் வேடசந்தூர் ஒன்றியம் தட்டாரப்பட்டி ஊராட்சி மூப்பனார் நகரில் இன்று அவர் தனது பிரச்சார வாகனத்தில் இருந்து மைக் மூலம் பேசி பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது அவரை வரவேற்பதற்காக ஆராத்தி தட்டுடன் நின்றிருந்த இளம் பெண் ஒருவர் திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்தார்.
உடனடியாக இதை கவனித்த அதிமுக வேட்பாளர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம் தனது பிரச்சார வாகனத்தில் இருந்து ஓடி வந்த மயங்கி கீழே விழுந்த இளம் பெண்ணுக்கு முதல் உதவி சிகிச்சை அளித்த பின்னர் மயக்கம் தெளிந்து இளம் பெண் எழுந்து நின்றார். இதனை அடுத்து அங்கிருந்த பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

மேலும் அதிமுக வேட்பாளர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம், மயக்கம் தெளிந்த இளம் பெண்ணை பரிசோதனை செய்தபோது அவருக்கு லோ பிரஷர் இருப்பது தெரியவந்தது. இதனை எடுத்து அவருக்கு ஆலோசனைகள் வழங்கி அவருக்கு தேவையான மாத்திரைகளை எழுதிக் கொடுத்து அங்கிருந்து அதிமுக வேட்பாளர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம் புறப்பட்டுச் சென்றார்.
கூட்டத்தில் மயங்கி விழுந்த இளம் பெண்ணுக்கு முதலுதவி சிகிச்சை அளித்த வீடியோ காட்சி சமூக வலைதளங்கள் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.




