• Sat. Jun 6th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வரும் சட்டமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெறும்-கே.வி.தங்கபாலு..,

BySeenu

Apr 15, 2026

ராகுல் காந்தி மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆகிய இருவர்களிடையே நல்ல நட்பு தொடர்வதாக தமிழக முன்னால் காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு தெரிவித்துள்ளார்…

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முன்னால் காங்கிரஸ் தலைவர்,முன்னாள் மத்திய அமைச்சர் கே.வி.தங்கபாலு தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்…

இந்நிலையில் கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.கூட்டணி வேட்பாளரான தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் சூர்ய பிரகாஷை ஆதரித்து பெரிய நாயக்கன்பாளையம் பகுதியில் கே.வி.தங்கபாலு பேசினார்..

அப்போது பேசிய அவர், தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி வெற்றி கூட்டணியாக தொடர்வதாக கூறிய அவர்,எவ்வளவு இடையூறுகள் வந்த போதும் கடந்த 20 ஆண்டுகளாக காங்கிரஸ் தி.மு.க.கூட்டணி ஒற்றுமையாக இருப்பதை சுட்டி காட்டினார்..

கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக அரசு செய்த செயல் திட்டங்களின் சாதனைகளை குறிப்பிட்ட கூறிய அவர், இந்திய அளவில் கல்வி,தொழில் என அனைத்து துறைகளிலும் இந்திய அளவில் முன்னனி மாநிலமாக தமிழ்நாடு உயர்ந்துள்ளதாக அவர் கூறினார்..

பெண்களின் நலன் காக்கும் அரசாக செயல்பட்டு வரும் தி.மு.க.கூட்டணி அரசை ஆதரித்து தமிழக மக்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என அவர் கேட்டு கொண்டார்.