விருதுநகர் மாவட்டம் சிவகாசி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி போட்டியிடுகிறார். இவர் தொடர்ந்து பல்வேறு தொழிலதிபர்கள், பட்டாசு ஆலை உரிமையாளர்கள் என பல்வேறு தரப்பினரை சந்தித்து ஆதரவு கோரி வருகிறார்.

இந்த நிலையில் சிவகாசியில் பணி புரியும் ஐடி ஊழிய பெண்களை சந்தித்த கே.டி.ராஜேந்திரபாலாஜி வரும் சட்டமன்றத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.பின்பு ஐடி ஊழிய பெண்களுடன் சிவகாசி தொகுதி வேட்பாளர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.




