• Thu. Aug 20th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

‘சினிமா சங்கி’ – இயக்குனர் சுந்தர் சி-ஐ விமர்சித்த பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன்..,

ByKalamegam Viswanathan

Apr 12, 2026

மதுரை மத்திய தொகுதியில் இன்று நடைபெற்ற பரப்புரை என்பது திமுக வேட்பாளர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன், அதிமுக கூட்டணி வேட்பாளர் இயக்குனர் சுந்தர் சி ஐ ‘சினிமா சங்கி’ என காட்டமாக விமர்சனம் செய்தார்.

மதுரை மத்திய தொகுதியில் திமுக சார்பாக பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன், அதிமுக கூட்டணியில் புதிய நீதி கட்சியின் சார்பாக தமிழ் திரைப்பட இயக்குனர் சுந்தர் சி ஆகியோர் களமிறங்கி வாக்கு சேகரித்து வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய தொகுதிக்கு உட்பட்ட மாநகராட்சி 56வது வார்டு முரட்டன் பத்திரி பகுதியில் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று பரப்பரை மேற்கொண்டார். அப்போது பேசி அவர், ‘விமானத்திலிருந்து இறங்கியது முதல் தற்போது வரை 500 பேரிடம் பேசி இருப்பார். அவர்களிடம் பேசியதை வைத்து இவராக கருத்து கூறிக் கொண்டிருக்கிறார்.

அரசியலில் எப்போதும் நாகரீகத்தை கடைப்பிடித்து வாழ்பவன் நான். சட்டமன்றத்தில் கூட யாரையும் எதிர்த்து பேசும் போதும் தனிப்பட்ட தாக்குதல் செய்வது இல்லை. இதை மத்திய தொகுதியில் கிராமர் சுரேஷ், ஜோதி முத்துராமலிங்கம் என என்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்கள் குறித்து தனிப்பட்ட தாக்குதலில் நான் ஈடுபட்டதில்லை.

ஆனால் இன்று நான் பேச வேண்டிய நிலைக்கு காரணம் இந்த தீய சக்திகள் தான். மீண்டும் மீண்டும் பொய்யையே கூறி பிரச்சாரம் செய்கிறார்கள். அவர்களுக்கே இது நன்றாகத் தெரியும். இந்த முறை டெபாசிட் வாங்குவார்களா எனக்கு தெரியாது. ஆனால் அவர்கள் டெபாசிட் கூட வாங்க விடாமல் செய்ய வேண்டியது வாக்காளர்களாகிய உங்களது கடமை. ஏனென்றால் இது மதுரையின் சுயமரியாதை. அடுத்து பெரிய நடிகராக ஆவதற்கு இந்த களத்தை பயன்படுத்துகிறார்கள். இதன் தயாரிப்பாளர் ஏ.சி. சண்முகம் என்றால் நடிகர் தான் இந்த சினிமா சங்கி. எல்லோரும் சேர்ந்து இயங்குகிறார்கள் அவர்களது அடுத்த தொழிலுக்காக. இவர்களைப் போன்ற கபடவேடதாரிகளை மதுரையின் வரலாறு என்றைக்குமே ஏற்றுக் கொண்டதில்லை.

நெஞ்சை தட்டி எல்லோரும் சொல்வோம். நா மதுர காரன் டா.. இதுல நீ யாரு… பாத்துருவோம் ஒரு கை…’ எனப் பேசினார்.