புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இலுப்பூரில்
நடைப்பயிற்சி மேற்கொண்டு அந்த தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கே.கே. செல்லப்பாண்டியனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தோல்வியின் உச்சத்தில் போய்விட்டார்.

எடப்பாடி பழனிச்சாமி அதனால் விரக்தியில் நிதி மேலாண்மையை கையாளத் தெரியவில்லை என்று பேசி வருகிறார். அதைப்பற்றி நாங்கள் கவலைப்படவில்லை, 200 தொகுதியில் வெற்றி பெறுவோம் என்று தெரிவித்திருந்தோம். தற்போதுள்ள
மக்கள் வரவேற்பையும் கூட்டத்தையும் பார்த்தால் 234 தொகுதிகளிலும் வெற்றி
பெறுவோம் எத்தனை பேர் வந்தாலும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியை யாராலும்
வெல்ல முடியாது. தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளை மாற்றி உள்ளனர். இது போன்று என்ன வேணாலும் பண்ணட்டும். இதற்கு மேலும் பண்ணுவார்கள் அதை பத்தி நாங்கள் கவலைப்படவில்லை
தமிழ்நாட்டில் இருக்கும் அதிமுக டெல்லியில் அடமானம் வைத்து விட்டனர்
குத்தகைக்கு விட்டு விட்டனர் அடிமையாகி விட்டனர். அதனால் அவர்களை டெல்லி தான் ஆட்சி நடத்துகிறது. அதிமுக என்ற திராவிட கட்சி இப்படி போனது வெட்கப்படுகிறோம் வேதனைப்படுகிறோம்.

நடிகர் உள்ளிட்ட யார் வந்தாலும் நாங்கள் கவலைப்படவில்லை நாங்கள் எங்கள்
வேலையை பார்க்கிறோம், நடிகர் பின்னாடி சென்று விபத்துக்கள் நேரிடுவதை நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். பின்னாடி செல்லும் இளைஞர்கள் விரைவில்
திருந்துவார்கள்..




