• Wed. Apr 8th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

அதிமுக வேட்பாளர் வி.பி.பி.பரமசிவம் உறுதி..,

தேசிய ஜனநாயக கூட்டணி வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா வடமதுரை ஒன்றியம் கூட்டத்துப்பட்டி, பாடியூர், புதுப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமப் பகுதிகளுக்கு சென்று இரட்டை இலை சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரித்தார். அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றார்கள்.

அதிமுக வேட்பாளர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம் பொதுமக்கள் மத்தியில் பேசிய போது கூறியதாவது:

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமைந்த உடன் மகளிர் உரிமைத்தொகை ரூ. 2 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். பதவியேற்ற முதல் வருடம் அனைத்து மகளிர்க்கும் தங்களின் வங்கிக் கணக்கில் ரூ 10 ஆயிரம் வரவு வைக்கப்படும். மகளிர் அனைவரும் மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும்.

கிராமப் பகுதிக்கு குடிநீர், சாலை, கழிவு நீர் வாய்க்கால் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும்.

திமுக ஆட்சியில் மின்சார கட்டணம் மூன்று முறை உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல சொத்து வரி, வீட்டு வரி உள்ளிட்ட வரிகள் உயர்த்தப்பட்டுள்ளது. வரிகள் பல மடங்கு உயர்த்தப்பட்டாலும் ஆனால் கிராமப் பகுதிகளில் குடிநீர், சாலை உள்ளிட்ட எந்த வித அடிப்படை வசதிகளும் நிறைவேற்ற வில்லை.

அதிமுக தேர்தல் அறிக்கை கூறியபடி வருடத்திற்கு ஒவ்வொரு குடும்பத்திற்கும் மூன்று சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் பிரிட்ஜ் இலவசமாக
வழங்கப்படும்.

திமுக ஆட்சியில் தனியாக பெண்கள் நடந்து செல்ல முடியாத அளவிற்கு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை இருந்தது.

அதிமுக ஆட்சியில் மாணவர்களுக்கு படிக்க வேண்டும் என்பதற்காக லேப்டாப் வழங்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சியில் குடி என்று கஞ்சாவை கொடுத்தார்கள். இதுதான் திமுக ஆட்சியின் லட்சணமாகும்.

மீண்டும் தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமைவதற்கு அனைத்து தரப்பு மக்களும் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

உடன் அதிமுக விவசாய அணி மாவட்ட செயலாளர் டி.சி.ராஜ்மோகன், வட மதுரை ஒன்றிய செயலாளர் தண்டாயுதம், நகர செயலாளர் பாலசுப்பிரமணி, பாட்டாளி மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் மு.கணேசன், வடமதுரை ஒன்றிய செயலாளர் வேல்முருகன்,
ஒன்றிய தலைவர் கணபதி மற்றும் அதிமுக, பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் சென்று வாக்கு சேகரித்தனர்.