• Thu. Jun 18th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் தீவிர வாக்கு சேகரிப்பு..,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர் வீரா எஸ்.டி.சாமிநாதன் போட்டியிடுகிறார்.

இவருக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேடசந்தூர் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் கோவிலூர் கிளை செயலாளர் அசோக், ஒன்றிய குழு உறுப்பினர்கள் ராகேஷ், மாரிமுத்து, மூத்த நிர்வாகி சண்முகம் மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சி கொடிகளை கையில் பிடித்தவாறு கோவிலூரில் வீடு வீடாக சென்று திமுக வேட்பாளர் வீரா எஸ்.டி.சாமிநாதனுக்கு ஆதரவாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரித்தனர்.