• Fri. Sep 18th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

அதிமுக மற்றும் த. வெ.கழக நிர்வாகிகள் திமுகவில் இணைப்பு விழா..,

அதிமுக திண்டுக்கல் மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட பொருளாளர் கோவிலூர் அம்பிகாபதி தலைமையில் அதிமுக மற்றும் தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த ஜெகசெல்வம், மனோ, ஜெயசூர்யா, விக்கி, டாக்டர் குணசேகரன் உள்ளிட்ட 150 க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வீரா எஸ்.டி.சாமிநாதனுக்கு சால்வை அணிவித்து திமுகவில் உறுப்பினராக தங்களை இணைத்துக் கொண்டனர

இந்நிகழ்ச்சியில் திமுக மாவட்ட பிரதிநிதி ஓ.பி.பாலு, ஊராட்சி செயலாளர் ஆர்.எம்.டி.சி.முருகேசன், ஒன்றிய வர்த்தக அணி செயலாளர் வீரக்குமார், விவசாய அணி மெடிக்கல் பாலு, திருமுருகன், சுப்பிரமணி, கிளை செயலாளர் செந்தில், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பிரபாகரன், மெடிக்கல் செந்தில் பண்ணை பாலா, திமுக இளைஞர் அணி கௌதமன், டிவி மெக்கானிக் மலையாளம், நடராஜ் வெங்கிடுசாமி, தொண்டரணி அமைப்பாளர் மலையாளம், கிளை செயலாளர் தேவராஜ் வேல்முருகன், பாட்ஷா, புதுக்கோட்டை திமுக ஆறுமுகம், நீதிராஜ், சரவணகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.