• Thu. Jul 9th, 2026
WhatsAppImage2026-07-03at000327
previous arrow
next arrow
Read Now

சேவலுடன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த வேட்பாளர் ப.குணாவால் பரபரப்பு..,

ByKalamegam Viswanathan

Apr 6, 2026

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் பாரதிய இந்து எழுச்சி இயக்கத்தின் சார்பில் சேவல் சின்னம் கேட்டு சேவலுடன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த வேட்பாளர் ப.குணா வால் பரபரப்பு ஏற்பட்டது.

இன்று 04/04/26 சனிக்கிழமை காலை 11.30 மணி அளவில் பாரதிய இந்து எழுச்சி இயக்கத்தின் சார்பில் திருப்பரங்குன்றம் தொகுதியில் வேட்பாளராக திரு குணா ஜி அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய பாரதிய இந்து எழுச்சி இயக்கத்தின் நிறுவனரும் வழக்கறிஞருமான திரு.A.மேகராஜபாண்டியன் Bcom BL அவர்களது தலைமையில் நிர்வாகிகள் மகளிர் அணியினருடன் வேட்பு மனு தாக்கல் செய்ய சேவலுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சேவல் சின்னம் கேட்டு சேவலுடன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த வேட்பாளர் குணாவிடம் சேவலுடன் வேட்புமனு தாக்கல் செய்ய காவல்துறையினர் அனுமதி மறுத்ததால் சிறிது நேரம் பேச்சு வார்த்தைக்கு பிறகு சேவல் இன்றி மனு தாக்கல் செய்தார் குணா.