• Fri. May 22nd, 2026
WhatsAppImage2026-05-15at0006252
previous arrow
next arrow
Read Now

பச்சிளம் குழந்தையை கொன்ற நர்சிங் மாணவி…

கன்னியாகுமரியில், பிறந்த சில மணி நேரத்தில் பச்சிளம் குழந்தையை நர்சிங் மாணவி முட்புதரில் வீசி கொன்றார்.

கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரை குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொற்றையடி அடுத்த கரம்பவிளை பகுதியில் உள்ள முட் புதரில் ஒரு பக்கெட்டில், அடைக்கப்பட்டு பச்சிளம் குழந்தை இறந்து கிடந்தது.

பிறந்த சில மணி நேரத்தில் பச்சிளம் குழந்தையை முட்புதரில் வீசி கொன்ற நர்சிங் மாணவி ரெஜினா(20) மற்றும் அவரது காதலன் நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடியை சேர்ந்த முகேஷ்(25) ஆகிய இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இருவரும் காதலித்து வந்த நிலையில் திருமணத்திற்கு முன் தகாத உறவில் குழந்தை பிறந்ததால் பிறந்த சில மணி நேரத்தில் வெளியே வீசி கொன்றது தெரிய வந்துள்ளது.

இச்சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.