• Mon. Mar 30th, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

பைக் மீது மோதி தூக்கி வீசப்பட்ட கோர விபத்து..,

BySeenu

Mar 30, 2026

கோவை – பொள்ளாச்சி சாலையில் போதையில் இளைஞர்கள் ஓட்டி சென்ற கார், இருசக்கர வாகனங்கள் மீது மோதும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

கோவை, ஒத்தக்கால் மண்டபம் அருகே போதையில் மூன்று இளைஞர்கள் ஓட்டி வந்த ‘TN 38 DE 5037’ என்ற எண் கொண்ட கார் அதிவேகமாக சென்று கட்டுப்பாட்டை இழந்து முன்னே சென்ற இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது பயங்கரமாக மோதினர். இந்த விபத்தில், பைக்கில் சென்றவர்கள் பந்து போல அந்தரத்தில் தூக்கி வீசப்பட்டு, சாலையில் விழுந்து ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்தனர்.

​இதனைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள், காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காரில் இருந்த மூன்று இளைஞர்களையும் மடக்கிப் பிடித்த பொதுமக்கள் அதில் வந்த மூன்று பேரும் போதையில் காரை இயக்கியதாக கூறப்படுகிறது.

இந்த விபத்து அங்கு இருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி உள்ளது. தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் அந்த ‘பகீர்’ காட்சிகள், பார்ப்போரின் நெஞ்சைப் பதற வைப்பதாக உள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக செட்டிபாளையம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, விபத்தை விசாரணை நடத்தி வருகின்றனர்.