• Thu. May 21st, 2026
WhatsAppImage2026-05-15at0006252
previous arrow
next arrow
Read Now

டீக்கடையில் டீ குடித்து பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் கே. டி. ஆர்..,

ByRadhakrishnan Thangaraj

Mar 30, 2026

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் NDA கூட்டணி கட்சி சார்பில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் தலைவர் ஜான்பாண்டியன் மனைவி பிரிசில்லா பாண்டியன் போட்டியிடுகிறார்.

இவரை ஆதரித்து விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சருமான கே டி ராஜேந்திர பாலாஜி இராஜபாளையம் பகுதிகளில் உள்ள தலைவர்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அதைத் தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் கே டி. ராஜேந்திர பாலாஜி சாலையோரம் உள்ள டீக்கடையில் அமர்ந்து டீ குடித்துவிட்டு மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். மக்களிடம் பேசிய பொழுது மத்தியில் மோடி ஆள வேண்டும் தமிழகத்தில் எடப்பாடி ஆள வேண்டும் நல்லாட்சி மலர்ந்திட தாமரைக்கு வாக்களிக்க வேண்டும் இராஜபாளையத்தில் கடந்த இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து மக்களை ஏமாற்றி வரக்கூடிய தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் இனிமேலும் மக்களை ஏமாற்ற முடியாது.

மக்களுக்காக எந்த திட்டத்தை செயல்படுத்தாமல் தனக்காக சொத்து சேர்த்துக் கொண்டு மக்களை ஏமாற்றி வரக்கூடிய தற்போது எம் எல் ஏ தங்க பாண்டியனுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டி அவர் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என மக்கள் மத்தியில் பேசி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.