• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்ற 1 லட்சத்து 18 ஆயிரத்து 200 ரூபாய் பறிமுதல்!!!

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வேடசந்தூர் சாலையில் பறக்கும் படை அதிகாரி சக்திவேல் தலைமையிலான அலுவலர்கள் வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக சத்திரப்பட்டியை சேர்ந்த சேதுபதி என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.

அவரை தடுத்து நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவர் உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்ற ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 200 ரூபாயை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அந்த பணத்தை தேர்தல் நடத்தும் உதவி தேர்தல் அலுவலர் சஞ்சய் காந்தி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு கருவூலத்தில் வைக்கப்பட்டது.