• Fri. May 22nd, 2026
WhatsAppImage2026-05-15at0006252
previous arrow
next arrow
Read Now

கொலை வழக்கில் கைது செய்த சம்பவம்..,

ByK Kaliraj

Mar 26, 2026

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா அச்சங்குளம் கிராமத்தில் பெயிண்டர் மதி செல்வம் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் மனோஜ் மற்றும் குருசாமி பாண்டியனை ஏழாயிரம் பண்ணை இன்ஸ்பெக்டர் குமாரி தலைமையில் போலீசார் கைது செய்தனர்.

மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த அச்சங்குளத்தைச் சேர்ந்த ராஜபாண்டி (வயது 24) தூத்துக்குடி பகுதியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் குமாரி தலைமையில் போலீசார் விரைந்து சென்று ராஜபாண்டியை கைது செய்தனர் .மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பந்துவார்பட்டியை சேர்ந்த நவீனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.