• Wed. Oct 14th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

வெளியானது வலிமை படத்தின் விசில் தீம்…

Byகாயத்ரி

Dec 22, 2021

போனி கபூர் தயாரிப்பில், ஹெச்.வினோத் இயக்கத்தில், அஜித் நடித்துள்ள ‘வலிமை’ திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையையொட்டி தியேட்டர்களில் வெளியாகிறது.

கடந்த 14-ம் தேதி ‘வலிமை’ படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில், இன்று ‘வலிமை’ படத்தின் விசில் தீம் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே, யுவன் ஷங்கர் ராஜா இசையில், இயக்குநர் விக்னேஷ் சிவன் வரிகளில் ‘நாங்க வேற மாரி’, ‘நான் பார்த்த முதல் முகம் நீ’ பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்தன.

எப்போதும் அஜித் – யுவன் கூட்டணி என்றால் பிஜிஎம்மும், தீம் மியூசிக்கும் வேற லெவலில் இருக்கும் என்பது ரசிகர்களின் கருத்து. அதற்கு, ‘பில்லா’, ’மங்காத்தா’ படங்களின் இசையே பெரும் சாட்சியாக உள்ளது. இந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள விசில் தீமிற்கும் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.