• Wed. Mar 25th, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

கடக்க முயன்ற சைக்கிள் மீது இருசக்கர வாகன மோதி விபத்து…

ByKalamegam Viswanathan

Mar 25, 2026

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ரயில்வே சுரங்கப்பாதை அருகே சைக்கிள் மீது இருசக்கர வாகன மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரையில் இருந்து திருப்பரங்குன்றம் செல்லும் சாலையில் திருப்பரங்குன்றம் ரயில்வே சுரங்கப்பாதை அருகே சுரங்கப்பாதையில் இருந்து சைக்கிள் ஒன்று சுரங்க பாதையில் இருந்து வெளியே வந்து ‌சாலையை கடக்க முயன்றுள்ளது. அப்போது பசுமலையில் இருந்து இருந்து திருநகர் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஆதித்யா (20) என்ற இளைஞர் சாலையை கடந்த சைக்கிள் மீது மோதி இருசக்கர வாகனத்துடன் இளைஞர் சாலையில் உருண்டபடியே விபத்துக்குள்ளானார்.

இதில் காயமடைந்த ஆதித்யா திருப்பரங்குன்றம் அரசு தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மதுரை டூ திருப்பரங்குன்றம் சாலை மற்றும் திருப்பரங்குன்றம் ரயில்வே சுரங்கப்பாதை அருகே மின்விளக்கு வசதி இல்லாமல் போதிய வெளிச்சம் இல்லாததால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர். சாலையை கடக்க முயன்ற சைக்கிள் மீது இருசக்கர மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகி இணையத்தில் பரவி வருகிறது.