• Sun. Mar 22nd, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

கல்குவாரியில் அழுகிய நிலையில் வாலிபரின் சடலம் மீட்பு..,

ByVasanth Siddharthan

Mar 22, 2026

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உள்ள செந்துறை அடுத்துள்ள சரளைபட்டியில் இயங்கி வரும் தனியார் கல்குவாரியில்(சங்கரா ப்ளூ மெட்டல்) பகுதியில்
சில மாதங்களாக சரளைபட்டியை சேர்ந்த மூக்கன் மகன் கருப்பசாமி(25)(மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது) என்ற வாலிபார் சுற்றித்திரிந்த நிலையில் 10 நாட்களுக்கு முன் காணாமல் போனாதாக உறவினர்கள் தேடி வந்ததார்.

குவாரில் சென்று கேட்டபோது இங்கெல்லாம் வரவில்லை என என்று சொன்னதாக கூறப்படுகிறது.இந்நிலையில் குவாரியில் எம் சாண்ட் அள்ளும் பணியில்
வடமாநில ஊழியர்கள் ஈடுபட்டிருந்தபோது எம் சாண்ட் கொட்டப்பட்ட 10அடி ஆழத்தில் காணாமல் போன கருப்பசாமி உடல் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதால் தகவல் கிராமமக்களுக்கு தெரிந்ததை அடுத்து உறவினர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் சக்கரா ப்ளூ மெட்டல் குவாரியை முற்றுகை
போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்த ஊரக காவல் கண்காணிப்பாளர் சங்கர்,நத்தம் காவல் ஆய்வாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நத்தம் அருகே குவாரிக்குள் வாலிபர் உடல் அழுகிய நிலையில் இளைஞர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்போதில் வரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.