• Sun. Apr 5th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

முதியோர்களுடன் உலக மகிழ்ச்சி தினம்..,

ByKalamegam Viswanathan

Mar 22, 2026

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் உலக மகிழ்ச்சி தினம் நிகழ்ச்சி தானப்ப முதலில் தெருவில் உள்ள மாநகராட்சி முதியோர் இல்லத்தில் நடைபெற்றது.

அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் உணவு ஏற்பாடு செய்து முதியோர்களுடன் உரையாடினார்.

சமூக பொறுப்பை ஏற்படுத்தும் வகையில் சாய்ராம் பாலிடெக்னிக் கல்லூரி மாணவ மாணவிகள் உணவு பரிமாற ஈடுபடுத்தப்பட்டனர்.

சமூக சேவகர்கள் இல.அமுதன் மற்றும் ரமேஷ்குமார் கலந்து கொண்டனர். முதியோர் இல்ல பொறுப்பாளர் இந்திரா நன்றி கூறினார்.