உலக தலைக்காய விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு, கோவையில் சாலை பாதுகாப்பு மற்றும் விபத்து தடுப்பு குறித்த விழிப்புணர்வு நடைப்பயணம் நடைபெற்றது.

உலகெங்கும் மார்ச் மாதம் ‘தலைக்காய விழிப்புணர்வு மாதமாக’ கடைபிடிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் தலைக்காயம் மற்றும் விபத்து காயம் மேலாண்மை விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது..

பொதுமக்கள்,செவிலியர்கள்,மருத்துவர்கள் என 400-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு நடைபயணத்தை பிரபல நரம்பு மற்றும் முதுகெலும்பு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கே. மாதேஸ்வரன் மற்றும் இந்திய மருத்துவ சங்க தலைவர் டாக்டர் கோஷல் ராம்,ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்..
முன்னதாக மருத்துவர் மாதேஸ்வரன் பேசுகையில்,அதிவேகமாக வாகனங்களை இயக்குவது, தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணியாத அலட்சியம் ஆகியவற்றால் ஏற்படும் விபத்துகளே உயிருக்கு ஆபத்தான தலைக்காயங்களுக்கு முக்கியக் காரணமாகின்றன. முறையான விழிப்புணர்வு மூலம் பல உயிர்களைக் காப்பாற்ற முடியும்,” எனத் தெரிவித்தார்.

ரேஸ்கோர்ஸ் பகுதியில் துவங்கிய இந்த விழிப்புணர்வு நடைப்பயணமானது டாக்டர் நஞ்சப்பா சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை வளாகத்தில் நிறைவடைந்தது. இதில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் என 400-க்கும் மேற்பட்டோர் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திச் சென்றது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது.




