• Sun. Mar 22nd, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

வாகை தமிழர் முன்னேற்ற சங்கத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம்..,

Byமுகமதி

Mar 21, 2026

புதுக்கோட்டையில் இன்று வாகை தமிழர் முன்னேற்ற சங்கத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு பேராசிரியர் ரெங்கசாமி தலைமை வகித்தார்.

புதுக்கோட்டை மாநகரப் பொறுப்பாளர்களான கட்டடப் பொறியாளர் எஸ்பி ஆறுமுகம், செல்லையா, அறிவழகன் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகளும் ஏராளமான பெண்களும் கலந்து கொண்டனர். வரும் தேர்தலில் திமுக, அதிமுக கூட்டணிகள் திருமயம், புதுக்கோட்டை, விராலிமலை போன்ற தொகுதிகளில் முத்தரையர் இனத்தைச் சேர்ந்த வேட்பாளர்களை அந்தந்த கட்சிகளில் நிறுத்த வேண்டும். அவ்வாறு நிறுத்தினால் அவர்களது வெற்றிக்குப் பாடுபடுவது, இல்லையென்றால் மூன்று தொகுதிகளிலும் வாகைத்தமிழர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் வேட்பாளர்களை நிறுத்தி அவர்களது வெற்றிக்காக முத்தரையர் இனத்தைச் சேர்ந்தவர்களையும் ஜாதி மற்றும் கட்சிகளுக்கு அப்பாற்பட்ட பொது வாக்காளர்களிடம் வாக்குகள் பெற்று வெற்றி பெற வைப்பது என்ற தீர்மானம் இயற்றப்பட்டது. மேலும் பல தீர்மானங்களாக
வாகை தமிழர் முன்னேற்ற சங்கத்தின் தீர்மானங்கள்.

  1. மாவட்டச் செயலாளர் பதவி வழங்க வேண்டும்.
  2. அமைச்சர் பதவிகள் வழங்க வேண்டும்.
  3. ஒன்றியச் செயலாளர் பதவிகள் கூடுதலாக வழங்க வேண்டும்.
  4. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆறு சட்ட மன்றத் தொகுதிகளை உள்ளடக்கி
    நாடாளுமன்றத் தொகுதியாக அறிவிக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
  5. திருமயம் தொகுதியில் அரசு சிற்பக் கலைக் கல்லூரி அமைத்துத்தர வேண்டும்.
  6. புதுக்கோட்டை ஆதனக்கோட்டை பகுதியில் முந்திரிப் பருப்பு உடைத்து விற்கும் அனைத்து மக்களுக்கும் மானியத்துடன் கூடிய சிறுதொழில் கடன் வழங்கித்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்தத் தொழில் சிறக்கவும் வறட்சியைப் போக்கவும் தைலமரக்காடுகளை அழித்து விட்டு முடிந்த இடங்களில் மட்டும் காப்புக்காடுகள் வளர்ப்பதோடு பெருமளவு முந்திரிக் காடுகளை உருவாக்கி அதை மக்களுக்குப் பயன்படும் வகையில் முந்திரிப் பருப்பு எடுத்து விற்பதுடன் ஏற்றுமதியும் செய்து அந்நியச் செலாவணியை ஈட்டி வீட்டுக்கும் நாட்டுக்கும் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
  7. தமிழகத்தில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தி மக்கள் தொகை விகிதாச்சார அடிப்படை
    யில் இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  8. புதுக்கோட்டை நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக தரம் உயர்த்தப் பட்டபோது இணைக்கப் பட்ட திருமலைராயசமுத்திரம், கவிநாடு கிழக்கு, கவிநாடு மேற்கு, 9ஏ, 9பி நத்தம்பண்ணை கிராமங்கள், வாகவாசல், முள்ளு}ர், திருக்கட்டளை ஊராட்சிகளுக்கு உரிய அடிப்படை வசதிகளான சாலை வசதி, வடிகால்வாய்க்கால் வசதி, குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதி போன்ற அடிப்படை வசதிகள் உடனடியாகச் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  9. அரசு மதுபானக் கடைகளைக் குறைத்துவிடுவதாக அறிவித்து விட்டு எலைட், நண்பர்கள் மன மகிழ் மன்றம் 11டூ11 போன்ற தனியார் மதுபானக் கடைகளை திறப்பதை செயற்குழு, பொதுக்குழு வன்மையாகக்
    கண்டிக்கிறது.
  10. புதுக்கோட்டை மாநகராட்சிப் பகுதிக்குள் அரசு சட்டக் கல்லூரி ஒன்று ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் இயற்றப்பட்டன.