• Thu. Oct 8th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

ஸ்ரீ ராஜ் நர்சரி பிரைமரி பள்ளியில் ஆண்டு விழா..,

Byமுகமதி

Mar 20, 2026

புதுக்கோட்டை 41 ஆவது வார்டு சேங்கைத்தோப்பு பகுதியில் இயங்கி வரும் ஸ்ரீ ராஜ் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் 23 வது ஆண்டு கலைத்திருவிழா மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு பள்ளியின் தாளாளர் முத்துக்கருப்பன் அனைவரையும் வரவேற்றார். பள்ளியின் தலைமை ஆசிரியர் எம். ராஜாத்தி ஆண்டறிக்கை வாசித்தார். தனியார் பள்ளிகளின் மாவட்ட கல்வி அலுவலர் பழனிவேலு தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை. முத்துராஜா, புதுக்கோட்டை மாநகர மேயர் திலகவதி செந்தில் ஆகியோர் கலந்துகொண்டு பள்ளி நிர்வாகத்தையும் பள்ளியின் மாநகரர்களையும் வாழ்த்தி பேசினார்கள்.

நிகழ்வில் மேலும் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஜான் வில்லியம், ரோட்டரி சங்கத் தலைவர் ராஜராஜன், செயலாளர் உதயசூரியன், மேனாள் தலைவர் லோகநாதன், பத்திர எழுத்தர் ராஜ்குமார், மீன்வளத்துறை ஓய்வு பெற்ற அலுவலர் பழனிச்சாமி புல் லிட்டர் கலந்து கொண்டனர். பள்ளி மாணவ மாணவியரின் திறமைகளை வெளிப்படுத்தும் பல்வேறு நிகழ்ச்சிகளும் போட்டிகளும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.