• Sat. Aug 29th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

டெல்லி அரசு வரிவிலக்கு வழங்கிய கிரிக்கெட் படம்

இந்திய கிரிக்கெட் அணி 1983ம் ஆண்டில் முதன் முறையாக உலக கோப்பையை வென்றது அப்போதைய கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக இருந்தவர் கபில்தேவ் விளையாட்டுவீரர்கள், விளையாட்டில் இருக்கும் அரசியல் பற்றி ஏராளமான படங்கள் வெளிவந்திருக்கிறது.

இந்திய கிரிக்கெட்டுக்கு பெருமை சேர்த்த 1983ல் வென்ற உலகக்கோப்பை வரலாற்றை எந்த மொழியிலும்இதுவரை படமாக்கப்படவில்ல முதல்முறையாக உலகக்கோப்பை வெற்றியை அடிப்படையாக கொண்டு 83 என்ற திரைப்படம், இந்தியில் உருவாகி உள்ளது. தமிழ் உள்ளிட்ட பிற இந்திய மொழிகளிலும் மொழிமாற்றத்துடன் வெளியாகிறது.

கபீர்கான் இயக்கி உள்ள இந்த படத்தில் கபில்தேவ் கதாபாத்திரத்தில் ரன்வீர்சிங் நடிக்கிறார். கபிலின் மனைவியான ரோமியா பாடியா வேடத்தில் தீபிகா படுகோனே நடித்துள்ளார். 1983ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்த தமிழக வீரர் ஸ்ரீகாந்தின் கதாபாத்திரத்தில் நடிகர் ஜீவா நடித்திருக்கிறார்.


மது மட்டேனா, கபீர் கான் மற்றும் விஷ்ணு இந்தூரி இணைந்து தயாரித்திருக்கிறார்கள். டிசம்பர்24ம் தேதி படம் திரைக்கு வருகிறது. இதையொட்டி டில்லியில் 83 திரைப்படத்திற்கு வரி விலக்கு அளிக்கப்படுவதாக அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.