• Fri. May 15th, 2026
WhatsAppImage2026-05-15at0006252
previous arrow
next arrow
Read Now

ஆவணமின்றி கொண்டுசென்ற ரூ.59,700 பணம் பறிமுதல்..,

ByP.Thangapandi

Mar 18, 2026

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல்-23 ந் தேதி நடைபெறுகிற சூழலில் தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதை தொடர்ந்து மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கண்ணனூர்- புள்ளனேரி ரயில்வே பாலம் பகுதியில் தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக தனிச்சியம் வடக்கு தெருவை சேர்ந்த காரில் வந்த அசோக் என்பவரிடம் இருந்து உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.59,700 பணத்தை கூட்டுறவு தணிக்கை அலுவலர் சதீஷ் பிரபு மற்றும் காவல்துறை எஸ்எஸ்ஐ செல்வகுமாரி தலைமையில் தேர்தல் கண்காணிப்பு எஸ்எஸ் 1பி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை உசிலம்பட்டி கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டு, அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.