• Sat. Oct 10th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

சோழவந்தான் அருகே சிறுமி மாயம்.!!

Byசோலைஆதி

Mar 17, 2026

சோழவந்தான் அருகே மேட்டுநீரேத்தான் கிராமத்தைச் சேர்ந்த வெள்ளையப்பன் மகன் ராகுல் 19, மகள் பூமிகா வயது 16. இவர்களுடைய அம்மா அர்ச்சனா குடும்பப் பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து இறந்துவிட்டார்.

இதனால் வெள்ளையப்பன் திருப்பூரில் இருந்து வேலை செய்து வந்தார். வாரத்துக்கு ஒரு முறை கிராமத்திற்கு வந்து சென்றுள்ளார். பூமிகா இவரது அண்ணன் ராகுல்ஆகியோர் பாட்டி வீட்டில் வளர்ந்து வந்தனர். கடந்த 9ஆம் தேதி மாலை பாட்டி வெளியே சென்ற நேரத்தில் பூமிகா காணவில்லை. இதுகுறித்து உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அக்கம்பக்கத்தில் தேடி பார்த்து பூமிகா கிடைக்கவில்லை இது குறித்து வெள்ளையப்பனுக்கு தகவல் கொடுத்தனர்.

வெள்ளையப்பன் சோழவந்தான் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன் பெயரில் சப் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் வழக்கு பதிவு செய்து காணாமல் போன சிறுமி பூமிகாவை தேடி வருகிறார்கள்.