• Sun. Mar 15th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

சாலையில் அடுத்தடுத்து தீ விபத்து விரைந்து வந்து தீயை அணைத்த தீயணைப்பு குழுவினர்..,

ByKalamegam Viswanathan

Mar 15, 2026

மதுரை திருப்பரங்குன்றம் சாலை பழங்காநத்தம் குமரகம் அருகே உணவகம் ஒன்று செயல்பட்டு இருந்தது தற்பொழுது அது தற்பொழுது அது செயல்படாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 9 மணி அளவில் பயங்கர தீ விபத்து ஆனது ஏற்பட்டது தகவல் அறிந்த மதுரை டவுன் தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் மதுரை டவுன் நிலைய அலுவலர் சுரேஷ் கண்ணா தலைமையிலான வீரர்கள் இரண்டு வாகனங்களில் வந்த சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக போராடி தீயை அணைத்தனர். மேலும் இந்த தீ விபத்தில் உசுபான் அலி 54 வயது காவலாளி தீக்குள் சிக்கிக்கொண்டார்.

எனினும் தொடர்ந்து அவரை தொடர்ந்து தொலைபேசியில் பேசிக்கொண்டு இருக்கும் இடத்தை அறிந்து கொண்டு சுவாச கருவி உதவியுடன் தீயணைப்பு வீரர்கள் சென்று லேசான காயத்துடன் பத்திரமாக மீட்டனர். உடனடியாக 108 அவசரகால ஊர்தி மூலமாக சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே மதுரை அழகப்பன் நகர் முத்துப்பட்டி பிரதான சாலையில் மின்மாற்றி அருகே முள்வேலியில் தீ விபத்தானது ஏற்பட்டது. இரண்டு வாகனங்களும் இங்கே இருந்ததால் உடனடியாக திருப்பரங்குன்றம் தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உதயகுமார் தலைமையிலான தீயணைப்பு மற்றும் குழுவினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி இந்த தீய எண்ணையும் அழைத்தார்.

ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் தீ விபத்து ஏற்பட்டது. அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது உடனடியாக மின் இணைப்பை துண்டித்த மின்வாரிய ஊழியர்கள் இரண்டு இடங்களிலும் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது