• Sun. Jun 21st, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

கோவை நேரு கல்வி குழுமங்கள் சார்பில் சிறப்பு அம்சங்கள் கொண்ட சிலை துவக்க விழா..,

BySeenu

Mar 14, 2026

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சி ஆகியவை கோவையின் பல முக்கிய பகுதிகளை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அழகு படுத்தி வருகின்றார்கள். கோவையில் உள்ள முக்கிய சந்திப்புகள், குளங்கள் மற்றும் சாலைகள் ஆகியவற்றை தனியார் பங்களிப்புடன் செம்மைப் படுத்தி வருகின்றார்கள்.

இதன் ஒரு பகுதியாக கோவையில் இன்று கோயம்புத்தூர் மாநகராட்சியுடன் இணைந்து கோவை நேரு கல்வி குழுமம் கோயம்புத்தூரின் சிறப்பு அம்சங்கள் கொண்ட சிலையை கோவையின் மையப் பகுதியான நீதிமன்ற நுழைவு வாயில் எதிரில் உள்ள போக்குவரத்து தீவுத்திடலில் இன்று நிறுவியுள்ளது.இதன் துவக்க விழாவில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர், திரு. பவன்குமார் ஜி கிரியப்பனவர், கோவை மாநகர காவல்தறை ஆணையாளர் திரு. என். கண்ணன் மற்றும் கோவை, மாநகராட்சி, ஆணையாளர், திரு. எம். சிவகுரு பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து கோவை, நேரு கல்வி குழுமங்களின், தலைமை நிர்வாக அதிகாரியும் செயலாளருமான டாக்டர் பி. கிருஷ்ணகுமார் கூறியதாவது :- இந்த சிலையானது கோவை மாநகரை தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று பெருமைப்படவைத்த முக்கிய நூற்பாலைகள், தொழில் துறைகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகள் ஆகியவற்றை குறிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கோயம்புத்தூரின் சிறப்பு அம்சங்கள் கொண்ட சிலையை நாங்கள் கோவையின் பெருமையாக நினைத்து இன்று இங்கு நிறுவி உள்ளோம் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அவர் கூறினார்.மேலும் விழாவில் நேரு கல்வி குழுமங்களில் இயக்குனர் திரு. அ. முரளிதரன் மற்றும் கல்லூரியின் முதல்வர்கள் பேராசிரியர்கள், சென்னை, பிளாக் ஷிப் மீடியா நிறுவனத்தின் நிர்வாகிகள் திரு. ஆர். மகா பிரபு, திரு. ஆர். சதீஷ்குமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.