• Sat. Mar 14th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

கோவை – அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பு..,

BySeenu

Mar 14, 2026

விளாத்திகுளத்தில் 10ம் தேதி 17 வயது சகோதரி பலியான விவகாரத்தில் இன்னும் தீர்வு கிடைக்கவில்லை. பெற்றோர் கொடுத்த புகாரை போலீசார் உடனே விசாரித்து இருந்தால் மாணவியை காப்பாற்றி இருக்க முடியும்.

இது காவல்துறையின் தோல்வி என்பதைவிட முதலமைச்சர் தலைமையின் கீழ் செயல்படும் காவல்துறை நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. முதலமைச்சர் வெட்கி தலை குனிய வேண்டும்.ந்த மாணவி பத்தாம் வகுப்பில் 495 மதிப்பெண் பெற்றுள்ளது.

அமைச்சர் ஏவ வேலு பிறந்தநாளை கொண்டாட மாட்டோம் என்று கூறுகிறார். அதற்கு அடிமை அரசு என்றும் சிலிண்டர் இல்லை விறகடுப்பு இல்லை என்று காரணம் கூறியிருக்கிறார். பெட்ரோல் கிடைக்காது என்று திமுக காங்கிரஸ் கட்சியினரும் வதந்தி பரப்புகிறார்கள். பொய்யையும் பரப்பி அக்களை வீதியில் நிறுத்துகிறார்கள்.

மத்திய அரசு தெளிவானவிளக்கம் கொடுத்துள்ளார். நமது உள்நாட்டு எல்பிஜி உற்பத்தி உயர்ந்து இருக்கிறது என்று மத்திய அமைச்சர் கூறி இருக்கிறார். வெளிநாட்டில் இருந்து கப்பலில் கேஸ் வருகிறது.

பக்கத்து நாடுகளான பாகிஸ்தானில் 20 சதவீதம் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது.10 நாட்கள்விடுமுறை விட்டுள்ளார்கள். ஆனால் இந்தியாவில் எந்த பாதிப்பும் இல்லை. எங்கேயும் பிரச்சனை இல்லை ஆனால் எதற்காக வீழ் வதந்தியை பரப்பி மக்களை வீதிக்கு அனுப்புகிறீர்கள். எனவே மக்கள் இதை நம்ப வேண்டாம். எங்கேயும் எந்த பிரச்சனையும் இல்லை. பெட்ரோலியத் துறை அமைச்சர் இந்தியாவில் இயற்கை வாயு உற்பத்தி பாதிப்பு இல்லை. வரக்கூடிய பொருட்கள் வந்து கொண்டிருக்கிறது. எந்த பிரச்சனையும் இல்லை.

எனவே திமுகவின் மற்றும் காங்கிரஸ் ஆர் பீதியை கிளப்ப கூடாது. பாராளுமன்றத்தில் ராஜீவ் காந்தி சம்பந்தமில்லாத பிரச்சனையை எழுப்புகிறார். வசந்தகுமார் எம்பி அவர்களே எலக்ட்ரிக் ஸ்டவ் விற்க வேண்டும் என்பதற்காக தவறான தகவல் கூறுகிறார்.
நேற்று அவர்கள் பாராளுமன்றத்தில் நடந்து கொண்ட விதம் ஏற்றுக்கொள்ள முடியாதது. அங்கு வழியில் உட்கார்ந்து பாராளு மன்றத்தின் மாண்பை காங்கிரஸ் எம்பிக்கள் குறைத்து உள்ளன . காங்கிரஸ் கட்சியினர் சிலிண்டர் தலையில் வைத்துக்கொண்டு ஏன் இந்த நாடகமாடுகிறார்கள்.

விளாத்திகுளம் சம்பவத்தில் தனிமனி எம்பி அன்பு சென்றபோது மக்கள் கோபத்தை காட்டியுள்ளனர். அங்கு முதலமைச்சர் நேரில் செல்ல வேண்டும்.

2021 ஆண்டு 1686 கொலைகள் தமிழகத்தில் பதிவாகியுள்ளன.2023 மற்றும் 2024, 2025 ஆம் ஆண்டு தரவுகளை மத்திய அரசுக்கு தமிழகத்தில் இருந்து தரவுகள் கொடுக்கப்படவில்லை. திமுக அரசு அதிகாரிகளையும் தவறாக பயன்படுத்துகிறார்கள்.

ஒரு பக்கம் திமுகவினர் பொய் சொல்கிறார்கள் அல்லது கொடுத்த தகவல்களை பிரித்து சொல்கிறார்கள்.

தேசிய ஜனநாயக கூட்டணி தமிழக தலைவர் எடப்பாடி பழனிச்சாமி திமுக ஆட்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளை பற்றி மக்களிடம் மக்களிடம் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த கூறியுள்ளார்.

கோவையில்17 ம் தேதிஎஸ் பி வேலுமணி தலைமையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் நான் உள்பட கட்ட அனைவரும் கலந்து கொள்கிறோம். டிடிவி தினகரன் அன்புமணி உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் அந்தந்த ஊர்களில் கலந்து கொள்கிறார்கள்.

கூட்டணிக்காக இணைந்து மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறோம். பொதுமக்கள் இதில் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.

தமிழக வெற்றி கழகம் நடந்த கூட்டத்தை பறித்து நான் கருத்து கூற முடியாது. அவர்கள் நடத்திய கூட்டம் குறித்து நான் பதில் சொல்ல முடியாது.

தேர்தல் கணம் சூடு பிடித்துள்ளது. எங்களுக்கு பெரிய பலமாக உள்ளது. யாரையும் எதிர்பார்த்து எங்கள் கூட்டணி இல்லை நாங்கள் பலமாக இருக்கிறோம் ஆரோக்கியமாக இருக்கிறோம் அதை 17 ஆம் தேதிநடைபெறும் கூட்டம் ஒரு சான்று ஆக இருக்கும்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் புதிய கட்சிகளை எதிர்பார்க்கலாமா என்று கேட்கிறீர்கள். திமுக கூட்டணியில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் குறைவாக கொடுக்கப்பட்டுள்ளது.

திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் திருப்தியாக இல்லை.திமுக கூட்டணியில் மாற்றம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு முன்பு நிறைய மாற்றம் வரும். டீயும் டியும் காப்பியம் சேருமா என்று கேட்கிறீர்கள்.

பொதுஎதிரியை வீழ்த்துவதற்கு அனைவரும் ஒன்று சேர்வது தமிழக அரசியலில் நடந்துள்ளது. தேர்தலுக்கு முன்பு வரை கடைசி நேரத்தில் கூட திருப்பம் ஏற்பட்டுள்ளது. திமுக அரசை தூக்கி எறிய வேண்டும். அ திமுக, பாஜக தொண்டர்கள் பாஜகவினர் உசுருப்பாக இருக்கிறார்கள். ஆனால் திமுகவினர் அகங்காரமாக இருக்கிறார்கள்.

எங்களைப் பொறுத்தவரை எந்த அவசரமும் இல்லை. 2021 இல் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு தன அதிமுக கூட்டணி அறிவிக்கப்பட்டது. எடப்பாடி பழனிச்சாமி மீது நான் விமர்சனம் செய்திருக்கிறேன் அவரும் விமர்சனம் செய்திருக்கிறார். 2026 ஆம் ஆண்டு பொருத்தவரை தமிழ்நாட்டிற்கு எடப்பாடி பழனிச்சாமி தேவை. ஆரோக்கியமான விமர்சனங்கள் தேவை. தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிக்கு இப்போது வழங்க வேண்டிய கடமை இருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக வேண்டும். தமிழ்நாட்டிற்கு தற்போது சிறந்த நிர்வாகம் உள்ள அரசு வரவேண்டும்.

ஜனநாயகம் படம் சிபிஐ வழக்கு என்று காரணமாக எனது வெற்றி கழகத்தை பேசிய நேக கூட்டணிக்கு வர வைக்க நினைக்கவில்லை..சிபிஐ விசாரணை வேண்டும் என்று தமிழக வெற்றி கழகத்தினர் தான் கேட்டார்கள் அதனை அவர்கள் தான் கேட்டார்கள். அது ஒரு சுதந்திரமான அமைப்பு. செந்தில் பாலாஜியை சிபிஐ அழைத்து விசாரிக்க வேண்டும் என்பதில் தவறில்லை. சரியான நடவடிக்கை. செந்தில் பாலாஜி இதற்கு பதர்வது ஏன்? அவர் ஒத்துழைக்க வேண்டும்.

இதில் எங்கள் கட்சியை யார்குற்றம் சுமட்டுகிறார்கள் இன்று காலை முதலமைச்சர் 2 சிறுவர்களின் வரவழைத்து க்காக பாராட்டி நல்லா படி என்று கூறியுள்ளார். கஞ்சாவை நினைத்தாலே அனைவரும் நன்றாக படிப்பார்கள்.

அவர்கள் அழைத்து பாராட்டி விட்டு கடைசியில் மீம்ஸ் போடாதீர்கள் என்று கூறியுள்ளார். மக்களை சந்திக்க வரும்போது தான் அவர் மீது மக்கள் எவ்வளவு கோபமாக இருக்கிறார்கள் என்று தெரியும். டெல்லியில் ராகுல் காந்தி, கேரள முதல்வர் மினராய் விஜயனை ஏன் கைது செய்யவில்லை என்று கேட்கிறார். ஆனால் தமிழ்நாட்டின் அவர்கள் கூட்டணி வைத்துள்ளனர். 2026 கேரளா பாஜக பெரிய கட்சி ஆக வரும்.

என்னை இதுவரை தேர்தலில் போட்டியிட கூறவில்லை. இப்போது எனது களப்பணிகளை செய்து வருகிறோம். கட்சி செல்வதை செய்வோம். நான் இதுவரை யாரிடமும் சீட்டு கொடுங்கள் என்று கேட்டதில்லை. கோவை திருப்பூரில் போட்டியிட முயற்சிக்கவில்லை. தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும்கொங்கு மண்டலத்திலிருந்து அதிக எம்எல்ஏக்கள் சட்டசபைக்கு செல்ல வேண்டும். இதற்காகவே நாங்கள் பணி செய்கிறோம்.