• Sat. Aug 8th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

கோவையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 28 வயது இளம் பெண்..,

BySeenu

Mar 14, 2026

சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் துறையினர் தீவிரன் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை, கருமத்தம்பட்டி காவல் துறையினருக்கு* கஞ்சா விற்பனைக்கு வைத்து இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் கருமத்தம்பட்டி வேட்டைக்காரன் குட்டை பிரிவு அருகில் சென்று சோதனை மேற்கொண்ட போது கஞ்சாவை விற்பனைக்காக வைத்து இருந்த மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்த இஸ்மேதரா காதும் (28) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து சுமார் 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து மேற்படி நபரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ, ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்து உள்ளார்.