• Sun. Oct 4th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

கிராம கோயில் பராமரிப்பு பணி மேற்கொள்வதில் இரு தரப்பினர் இடையே பிரச்சனை..,

BySubeshchandrabose

Mar 12, 2026

தேனி அருகே அன்னஞ்சி விளக்கு பகுதியில் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த காளியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது.

இரு சமுதாய கிராம மக்கள் ஒன்றிணைந்து கோயில் திருவிழாக்கள் மற்றும் பூஜைகளை நடத்தி வந்தனர்

இந்த நிலையில் கோயிலை நிர்வாகிப்பது குறித்து இருதரப்பினரிடையே பிரச்சனை ஏற்பட்டு பெரியகுளம் கோட்டாட்சியர் விசாரணை நடைபெற்று வந்தது.

தற்போது கோயில் பராமரிப்பு பணி மேற்கொள்வதற்காக ஒரு தரப்பினர் நீதிமன்றம் சென்று உத்தரவைப் பெற்றது வந்து ஜேசிபி வைத்து கோயிலை இடிக்கும் பணியை மேற்கொண்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த மற்றொரு தரப்பினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோயில் வளாகத்தில் திரண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் இரு தரப்பினர் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இருதரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

இதனை தொடர்ந்து பராமரிப்பு பணியையும் மேற்கொள்ளாமல் அனைவரையும் அங்கிருந்து கலைந்து செல்ல அறிவுறுத்தினர்.