• Thu. Sep 10th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

குறை தீர்க்கும் முகாமில் மனு கொடுப்பதற்க்காக நீண்ட வரிசையில் நின்ற பொதுமக்கள்..,

ByAnandakumar

Mar 9, 2026

கோடை காலம் தொடங்கி வெயில் சுட்டெரித்து வருகிறது. அதிலும் கரூர் மாவட்டத்தில் இப்பொழுதே 100 டிகிரியை தொட்டு கடும் வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்நிலையில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் ஆட்சியரிடம் மனு கொடுக்க ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர்.

அவர்கள் தங்கள் மனுவை பதிவு செய்த பிறகு ஆட்சியரிடம் மனு கொடுக்க நீண்ட வரிசையில் கடும் வெயிலில் கால் கடுக்க நின்றனர். இதில் என்னவென்றால் பெரும்பாலனோர் வயதான முதியவர்கள் வெயிலை சமாளிக்க முடியாமல் திணறியபடி நின்றனர்.

இதனை மாவட்ட நிர்வாகம் கருத்தில் கொண்டு கோடை காலம் முடியும் வரை பொதுமக்கள் வெயிலால் பாதிக்கப்படாதவாறு மாற்று ஏற்பாடு உடனடியாக செய்திட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை எழுப்பியுள்ளனர்.