• Sun. Mar 8th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

அலங்காநல்லூர் அருகே 100 நாள் வேலை கேட்டு எம்எல்ஏ வை முற்றுகையிட்ட பெண்கள்..,

ByKalamegam Viswanathan

Mar 8, 2026

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பாரப்பட்டி ஊராட்சி சரந்தாங்கி கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் கூடுதல் கட்டிடத்தை திறந்து வைப்பதற்கு சோழவந்தான் திமுக எம்எல்ஏ வருகை தந்தார்.

புதிய கட்டடத்தை திறந்து வைத்து மாணவர்கள் மத்தியில் பேசிய பின்பு புறப்பட காருக்குச் சென்ற எம்எல்ஏ வை அங்கிருந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகையிட்டு தங்களுக்கு 100 நாள் வேலை முறையாக வழங்கப்படவில்லை என கூறினர்

அப்போது அவர்களிடம் பேசிய திமுக எம்எல்ஏ வெங்கடேசன் 100 நாள் வேலையை 125 நாள் தருகிறேன் என்று சொன்னாங்களா? பின்பு 150 நாட்கள் தருகிறேன் என்று சொன்னாரங்களா என மத்திய அரசை ஒருமையில் பேசியது அங்கிருந்தவர்களை முகம் சுளிக்க வைத்தது.

மூணாம் தர நாலாம் தர பேச்சாளரை போல் மக்கள் பிரதிநிதியான திமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருமையில் பேசியது அங்கிருந்தவர்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது

தொடர்ந்து பெண்கள் தங்களுக்கு 100 நாள் வேலை வழங்க வேண்டும் என எம்எல்ஏவிடம் வலியுறுத்தி கொண்டே இருந்தனர்

ஒருவாராக அவர்களை சமாளித்த திமுக எம்எல்ஏ மீண்டும் திமுக ஆட்சி அமைந்தால் உங்களுக்கு தொடர்ந்து 100 நாள் வேலை வழங்கப்படும் என கூறி காரில் ஏறி சென்றார்

எம்எல்ஏ நிகழ்ச்சிக்கு எம்எல்ஏ மற்றும் அவரிடம் வந்தவர்களுக்கு பள்ளி சார்பில் போடப்பட்டிருந்த சேர் மற்றும் பெஞ்சுகளை பள்ளி மாணவர்களை வைத்து தூக்கிச் செல்ல வைத்தது அங்கே இருந்த பள்ளி மாணவர்கள் மாணவிகளின் பெற்றோர்களை கடும் அதிர்ச்சி அடைய வைத்தது.

திமுகவின் தற்போதைய மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பல்வேறு காலகட்டங்களில் ஒருமையில் பேசி பொதுமக்கள் இடத்தில் கடும் எதிர்ப்புகளை சம்பாதித்து வரும் நிலையில்,

தற்போது திமுகவின் மற்றொரு எம்எல்ஏவும் ஒருமையில் பேசியது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

திமுக என்றாலே ரவடித்தனம் ஆணவப் பேச்சு என பொதுமக்களிடத்தில் நெருங்க முடியாத நிலை தற்போதும் ஏற்பட்டு வருவதாக அங்கிருந்தவர்கள் கூறிச் சென்றனர்.