• Wed. Jun 3rd, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

காமாட்சி அம்மன் கோவிலை தீ வைத்து எரித்து சேதம் பத்து லட்ச ரூபாய் சேதம்..,

ByKalamegam Viswanathan

Mar 2, 2026

மதுரை மாவட்டம் மேலமாத்தூர் ஊராட்சி காமாட்சிபுராத்தில் உள்ள அருள்மிகு காமாட்சி அம்மன் கோவில் சுமார் 60 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு கட்டப்பட்டு வருகிறது.

இதனால் இங்குள்ள சுவாமிகளை அருகில் தற்காலிக குடிசை அமைத்து அந்தப் பகுதி மக்கள் சுமார் 70-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வழிபாடு செய்து வந்தனர். இதில் வெண்கலத்தால் ஆன காமாட்சியம்மன் விநாயகர் முருகன் சிலை வைத்து வழிபாடு செய்து வந்தனர். இந்த கோவிலில் நடைபெற்று வரும் பணிகளை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கருப்பையா பொதுமக்களிடம் வரி வசூல் செய்து கோவிலை கட்டி வருகிறார். மேலும் கோவிலுக்கு பாதுகாப்பாகவும் கோவிலிலேயே தங்கி இருந்து வருகிறார்.

தினந்தோறும் இரவு நேரங்களில் கோவில் உள்ளே தூங்குவது வழக்கம் இந்நிலையில் நேற்று எப்போதும் போல் கருப்பையா கோவிலுக்கு தூங்காமல் கோவிலுக்கு அருகில் உள்ள தற்போது கட்டப்படும் கட்டிடத்தில் தூங்கி இருக்கிறார். இந்த நிலையில் அதிகாலை 3 மணி அளவில் கோவில் சிலைகள் பணம் இருந்த இடத்தில் மலை மேல தீ பற்றி எரிந்து கொண்டிருந்த நிலையில் எழுந்து பார்த்தபோது தீமளமளவென எரிந்து கொண்டிருந்தது தெரிந்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அருகில் உள்ளவருக்கு தகவல் சொல்லி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்து வரவழைத்து கட்டுக்கடங்காத தீ அணைக்கப்பட்டது.

கோவிலின் அருகில் கட்டப்பட்ட வரும் புதிய கட்டிடத்தில் கருப்பையா படுத்து உறங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக கூறப்படுகிறது.
கடந்த மூன்று மாதத்திற்கு முன்பாக இருந்தே இந்த இடத்தில் கோவில் கட்டுவதில் சிலர் இடையூறு செய்து வந்ததாகவும் கருப்பையா முக்கிய புள்ளியாக இருப்பதால் அவரை அச்சுறுத்தல் செய்யும் நோக்கில் தீவைக்கப்பட்டதாகவும் தெரிகிறது.

இது குறித்து நாகமலை புதுக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்து முதற்கட்ட விசாரணை அடிப்படையில் இரு நபர்களை விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். கிராம மக்கள் அனைவரும் ஒற்றுமையாக சேர்ந்து ஒருவருக்கு தலா ஐம்பதாயிரம் முதல் 60 லட்ச ரூபாய் திட்ட மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கோவிலில் இடையூறுகள் பல ஏற்படுத்தி தற்போது தீ வைக்கும் அளவிற்கு அது முற்றியிருப்பது வருந்தத்தக்கதாகவும் எதிர்ப்பு தெரிவிக்கும் அனைவரையும் கொலை செய்யும் நோக்கில் சம்பவம் நடைபெற்றுள்ளதாக கூறப்படும் நிலையில் கோவிலில்
தீ வைக்கும் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் பக்தர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மேலும் இந்த கோவிலில் வழிபடும் பக்தர்களுக்கும் அச்சுறுத்தல் இருப்பதாக அதை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றனர். மேலும் அரசு பொதுத்தேர்வு இன்று தொடங்கிய நிலையில் இந்த பகுதியில் உள்ள பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தேர்வுக்கு அனுப்பாமல் ஒருவித அச்சத்துடன் வீட்டில் வைத்திருப்பதாக கூறுகின்றனர். எப்போது வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்று கூறும் பொதுமக்கள் ஒரு விதஅச்சத்துடன் குடியிருந்து வருவதாக கூறுகின்றனர். காவல்துறை இந்த பகுதியில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.