• Tue. Aug 4th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

வேட்பாளராக போட்டியிட்டவர்களுக்கு பணத்தை தராத மாநகராட்சி..,

ByS.Ariyanayagam

Feb 28, 2026

திண்டுக்கல் மாநகராட்சியில் கடந்த 4 வருடங்களாக வேட்பாளர் டெபாசிட் தொகையை திருப்பிக் கொடுக்காத மாநகராட்சியை கண்டித்து விரைவில் தர்ணா போராட்டம் நடைபெறும் என கடந்த மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

திண்டுக்கல் மாநகராட்சியில் கடந்த 2022 ஆம் ஆண்டு கவுன்சிலருக்கான தேர்தல் நடைபெற்றது.இந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறாத வேட்பாளர்கள் கட்டிய ரூ 4000 டெபாசிட் தொகை இதுவரை வழங்கப்படவில்லை. இது சம்பந்தமாக மாநகராட்சி ஆணையர் மற்றும் அலுவலர்களிடம் தெரிவித்தும் டெபாசிட் தொகையை கொடுக்காமல் அலட்சியம் செய்து, அவமானம் படுத்துவதாக வேட்பாளர்கள் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும் 4 வருடமாக போராடியும் வேட்பாளருக்கான டெபாசிட் தொகையை திருப்பி கொடுக்காத மாநகராட்சியை கண்டித்து பாதிக்கப்பட்ட வேட்பாளர்கள் மாநகராட்சியை முற்றுகையிட்டு தர்ணா போராட்டம் நடத்த போவதாக கடந்த தேர்தலில் மாநகராட்சியில் வேட்பாளராக போட்டியிட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.