புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் மீனம்பட்டிஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தேசிய அறிவியல் தின நிகழ்ச்சிகள் நடைபெற்றது .இந்த விழா மீனம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் க.ஜெயலெட்சுமி தலைமையில் நடைபெற்றது.

பள்ளியின் கணித பட்டதாரி ஆசிரியர் பி. அகத்தீஸ்வரன் வரவேற்புரை ஆற்றினார். சிறப்பு அழைப்பாளராக மாநில துணைத் தலைவர் ம.வீரமுத்து கலந்துகொண்டு தேசிய அறிவியல் நிகழ்வுகள் தினம் குறித்து சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில் கல்வி கற்றுக் கொள்ளும் போது ஒவ்வொரு செயல்பாடுகளுக்கும் அறிவியல் ரீதியான சிந்தனைகள் எழ வேண்டும். இப்போதுதான் நாம் கற்றுக்கொள்ளும் கல்வியானது அறிவியல் சிந்தனைகளோடு வெளிப்படும். அறிவியல் சிந்தனை தான் நம்மை அடுத்த கட்ட வளர்ச்சிக்கும் எடுத்துச் செல்லும்.
அதேபோல் வரும் தலைமுறையினரும் அடுத்தடுத்து தலைமுறையினருக்கு அறிவியல் சிந்தனைகளை எடுத்துச் செல்ல ஏதுவாக இருக்கும் என்றார்.
இந்நிகழ்வில் மேலும் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் முனைவர். பிச்சைமுத்து ,மாவட்ட இணைச் செயலாளர்கள் ம.சிவானந்தம், மு.சாமியப்பன், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கறம்பக்குடி வட்டாரச் செயலாளர் பி. வீர பாலன்,பொருளாளர் முத்து, வானவில் மன்ற கருத்தாளர் அனாமிகா, காப்பாளர் அண்ணாதுரை, பள்ளியின் ஆசிரியர்கள் கோ.தானம்மாள், வி கனகலட்சுமி,ச. மகாலட்சுமி, பி.பார்வதி, மு.இளவரசி ஆகியோரும் மீனம்பட்டி கிளையின் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். அறிவியல் தினத்திற்காக அறிவியல் சோதனைகளை மாணவர்கள் மிக அழகாக செய்து காட்டி விளக்கினார்கள். நிறைவாக ஆசிரியர் சி.ஷோபா நன்றியுரை ஆற்றினார்..







