• Fri. Feb 27th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

அதிமுக செயல்வீரர்கள் கூட்டம்- டாக்டர்.சி.விஜயபாஸ்கர் பேச்சு..,

Byமுகமதி

Feb 26, 2026

புதுக்கோட்டை வடக்கு மாவட்ட விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இலுப்பூர் பேரூராட்சி, அன்னவாசல் பேரூராட்சி , அன்னவாசல் மேற்கு ஒன்றியம், அன்னவாசல் கிழக்கு ஒன்றியம் ஆகிய ஒன்றியங்களுக்கு உட்பட்ட அஇஅதிமுக செயல் வீரர்கள் வீராங்கனை ஆலோசனை கூட்டம் இன்று இலுப்பூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் , புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழக செயலாளர், விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் தலைமை வகித்தார், இக்கூட்டத்தில் பிஜேபி, அமமுக, தமாக, ஐஜேகே உள்ளிட்ட கூட்டணிக் கட்சி மாவட்டத் தலைவர்கள் , ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் “புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் நல்லாசியோடு அண்ணன் எடப்பாடியார் அவர்கள் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார். காவிரி வைகை குண்டாறு இணைப்புத் திட்டமானாலும் சரி, 7.5% இட ஒதுக்கீடு ஆனாலும் சரி, காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டம் ஆனால் சரி கொடும்பாளூர் ஐடிஐ கல்லூரி, விராலிமலை முருகன் கோவில் மலைப்பாதை உள்ளிட்ட அத்தனை திட்டத்தையும் கொடுத்த சின்னம் இரட்டை இலைச் சின்னம். தாலிக்குத் தங்கம் வரலை மடிக்கணினி வரலை எல்லாம் வரும் எல்லாம் கிடைக்கும் இரண்டு மாதத்தில் அண்ணா திமுக ஆட்சியிலே.

விராலிமலை என்பது அண்ணா திமுகவின் கோட்டை. குறிப்பாக இலுப்பூர் பேரூராட்சி அன்னவாசல் மேற்கு ஒன்றியம் அன்னவாசல் கிழக்கு ஒன்றியம் எல்லாம் அண்ணா திமுகவின் எஃக்கு கோட்டை. இந்தக் கோட்டையிலே ஓட்டையைப் போட முடியாது முட்டி மோதி அவர்கள் தலையில் தான் ரத்தம் வரும் என்றார்.

இந்த நிகழ்வில் ஒன்றியச் செயலாளர்கள் பரம்பூர் சுப்பையா, முத்தமிழ்செல்வன், இலுப்பூர் நகரச் செயலாளர் சத்யா மணிகண்டன், அன்னவாசல் நகரச் செயலாளர் அப்துல் அலி, பொதுக்குழு உறுப்பினர் சாலை மதுரம், மகளிரணிச் செயலாளர் அன்னலெட்சுமி உள்ளிட்ட 5000 பேருக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அவைச உணவு விருந்து அளிக்கப்பட்டது.