• Wed. Feb 25th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

அதிமுக வரும் தேர்தலில் எதிர்க்கட்சியாக கூட ஜெயிக்காது என நினைக்கிறேன்- இ. பெரியசாமிபேட்டி..,

ByVasanth Siddharthan

Feb 25, 2026

திண்டுக்கல் மாவட்டத்தில் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொன்னிமாந்துறை பகுதியில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ. பெரியசாமி பல்வேறு முடிவுற்ற திட்டங்களை திறந்து வைத்தும், வேளாண் வங்கி துவங்குவதற்கு அடிக்கல் நாட்டியும் வைத்தார். பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது :

குடும்பத்திற்கு பத்தாயிரம் ரூபாய் உதவித்தொகை அதிமுக ஆட்சி வந்தவுடன் வழங்கப்படும் என தேர்தல் அறிக்கை கூறியுள்ளார் என்ற கேள்விக்கு :

ரொம்ப நல்லவர் ! மோடி சொல்லி கொடுத்திருப்பார், பீகாரில் கொடுத்தது போல தேர்தலுக்கு முன்பாக கொடுத்தார்கள். இப்போது கொடுக்க முடியாது நேரடியாக கொடுக்க முடியாது,

மோடி 15 லட்சம் கொடுப்பேன் என்று சொன்னார் 10 வருடத்திற்கு முன், சொன்னாரே அதை கொடுத்து விட்டாரா? தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர் மோடியை 15 லட்சத்தை முதலில் கொடுக்கச் சொல்லுங்கள் அதைக் கொடுத்தால் மக்கள் அனைவரும் பணக்காரர்கள் ஆகிவிடுவார்கள்.

ஆட்சிக்கு வந்தவுடன் சில வரிகளை உயர்த்தி இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என கூறியுள்ளார் என்ற கேள்விக்கு :

அது உண்மைக்கு மாறானது, அவர் ஒன்றும் பொருளாதார நிபுணர் கிடையாது. அவர் ஏதும் ப்ரொஜெக்ட் தயார் செய்கிறாரா? நிதிநிலை அறிக்கையில் நேற்று பேசியதை நீங்கள் அனைவரும் பார்த்தீர்கள், பேசியதையே பேசி வருகிறார். ஐந்தாண்டு காலங்களாக ஒரே சப்ஜெக்ட்டை தான் பேசி வருகிறார்கள். வேறு எதையும் அவர்கள் பேசவில்லை, எதையாவது போற போக்கில் பேசிட்டு போறார்கள் போகட்டும். பெயருக்கு வந்து செல்கிறார்கள் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் தன்னுடைய கடமையை மாற்றியதாக நான் உணரவில்லை எனக்கு அப்படி தான் தெரிகிறது.

மத்திய அரசுக்கு செல்லக்கூடிய GST 29 பைசா வரியை திரும்பி வாங்கித் தர சொல்லுங்கள் 70 பைசா திருப்பி வாங்கி தர சொல்லுங்கள் 30 பைசாவை 70 பைசா ஆக மாற்றி வாங்கி தர சொல்லுங்கள் பாலாறும் தேனாறும் தமிழ்நாட்டில் ஓடும், அவருக்கு தலைவர் மோடியும் அமித்ஷாவும் தானே நம்மிடம் வரியை வாங்கி மற்ற மாநிலங்களுக்கு பிரித்துக் கொடுக்கிறார்கள், ஊரான் வீட்டு நெய்யே என்னோட கையே என்பது போல இருக்கிறது. இன்று மத்திய அரசு துரோகம் செய்கிறது, அவருக்கு துணை போகிறார் எடப்பாடி பழனிச்சாமி. எப்படி அவர் கொடுப்பார்? ஆட்சிக்கு வரப்போவதில்லை எதிர்க்கட்சியாக கூட வராது என்று நான் நினைக்கிறேன். எதிர்க்கட்சி அந்தஸ்து வாங்குவது கூட சந்தேகமா தான் இருக்கிறது.

நேற்று பார்க்கிறீர்கள் ஆளாளுக்கு ஒரு கட்சி ஆரம்பிக்கிறார்கள் தேர்தல் முடிவில் அது தெரியும்.

1205 வாக்குறுதிகளில் 100 வாக்குறுதிகளை எங்களால் நிறைவேற்றப்பட முடியவில்லை ஆனால் அதற்கு மேல் சில வாக்குறுதிகளை செய்துள்ளோம் என நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் ஆயிரம் விளக்கு எம்எல்ஏ கூறியுள்ளார் என்ற கேள்விக்கு :

சொல்லாதது காலை உணவு திட்டம், பிள்ளைகளைப் பற்றி யாரும் கவலைப்பட தேவையில்லை, காலையில் சூப்பராக உணவு உள்ளது, விடியல் பயணம், மகளிர் பேருந்து கட்டணம் இல்லாமல் பேருந்தில் பயணம் செய்வது என்பதை முதல் முதலில் கையெழுத்திட்டார் நமது தமிழக முதல்வர். இப்படி சொல்லாத திட்டங்கள் நிறைய நம் தமிழக முதல்வர் நிறைவேற்றி உள்ளார். இந்த மாவட்டத்தில் 89 இல் 850 ரேசன் கடைகளே இருந்தது. இன்று 1300 கடைகள் வந்ததற்கு காரணம் கலைஞர் தான். அதற்காக கிட்டத்தட்ட 400 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அந்தந்த கிராமங்களிலேயே பகுதி நேர ரேஷன் கடையை உருவாக்கினார். இப்போது நமது தலைவர் எங்கெங்கு கேட்கிறார்களோ அங்கெல்லாம் பகுதி நேர ரேஷன் கடையில் கொடுங்கள் என்று உத்தரவிட்டுள்ளார். வீடு தேடி போய் வாங்குவது போல் அவரவர்கள் வீட்டில் அருகாமலேயே ரேஷன் கடைகள் வந்து விட்டன. ஐந்தாண்டு காலங்களில் மக்களுக்கு கிடைக்கக்கூடிய நலத்திட்டங்களை விரிவாக்கம் செய்து தமிழக முதல்வர் செயல்படுத்தி வருகிறார்.

காங்கிரஸ் திமுக கூட்டணி இழுபறிக்கு கூடுதல் இடங்கள் மற்றும் ராஜ்யசபா எம்பி கேட்பதால் காங்கிரஸுக்கும் திமுகவிற்கும் இழுபறி நீடிக்கப்பட்டு வருகிறது என்று கூறுகிறார்கள் என்ற கேள்விக்கு :

ஒண்ணுமே இல்லை கூட்டணி சுமுகமாக வந்துள்ளது என வந்துவிட்டது, மகிழ்ச்சியாக இருக்கிறது, எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். எல்லா கட்சித் தலைவர்களும் வருகிறார்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக தான் செல்கிறார்கள். அதையும் நான் டிவியில் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் எத்தனை சீட்டுகள் கேட்டு வருகின்றனர் என்ற கேள்விக்கு:

அதற்கு என்று தனி குழு அமைத்து உள்ளனர் அவர்களுக்குத்தான் அது தெரியும்.

இரண்டு கட்சியும் மாறி மாறி இலவசங்களை அறிவித்துள்ள நிலையில் வீட்டு வரி, மின்சார வரி, சொத்து வரி, குப்பை வரி உள்ளிட்ட வரிகளை குறைப்பதற்காக மந்திரி சபையில் ஏதாவது முடிவெடுக்கப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு :

306 ஊராட்சிகள் இருக்கின்றது திண்டுக்கல் மாவட்டத்தில். எங்குமே வரிகள் உயர்த்தப்படவில்லை நான் தான் அமைச்சராக இருக்கிறேன், எங்குமே வரி உயர்த்தப்படவில்லை, குழாய் கேட்டால் அனுமதி கொடுத்துள்ளேன், எத்தனை பேர் குழாய்கள் கேட்டாலும் போட்டுக் கொள்ளுங்கள் என்று சொல்லி உள்ளேன். அவர்களிடம் பணம் கேட்கக்கூடாது என்று சொல்லி உள்ளோம். இப்போது மூன்றாவது தண்ணீர் திட்டம் வந்துள்ளது. எல்லா ஊர்களிலும் குழாய் போடப்பட்டுள்ளது, அதற்கான ஒத்திகை பார்க்கப்பட்டு வருகிறது. அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கப்பட உள்ளோம் அதில் எந்த சந்தேகமும் இல்லை .

5 லட்சம் கோடி கடன் இருந்தது தற்பொழுது 10 லட்சம் கோடியாக கடன் சுமை உயர்ந்து உள்ளது இதற்கு இலவசங்களை தவிர்க்கலாமே என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது என்ற கேள்விக்கு :

அவர்கள் வைத்து சென்ற ஐந்து லட்சம் கோடி ரூபாய்க்கு நாங்கள் 35 ஆயிரம் கோடி ரூபாய் வரை வட்டி கட்டி வருகிறோம், அதற்கு அவரை பதில் சொல்ல சொல்லுங்கள் என்று ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பேட்டி அளித்தார்