• Tue. Apr 14th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

அம்மாவின் 78 வது பிறந்தநாள் விழா..,

ByP.Thangapandi

Feb 24, 2026

உசிலம்பட்டியில் அம்மாவின் 78 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நகர் ஓகழகத்தின் சார்பில் அம்மாவின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு பொங்கல் மற்றும் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்*

மறைந்த முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 78 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை அருகில் அதிமுக கழகத்தின் சார்பில் அம்மா பேரவை நகர செயலாளர் வழக்கறிஞர் லட்சுமணன் ஏற்பாட்டில் நகரச் செயலாளர் பூமா ராஜா தலைமையில் உசிலம்பட்டி முன்னாள் எம்எல்ஏ வும் கழக அமைப்புச் செயலாளருமான ஐ. மகேந்திரன் முன்னிலையில் அதிமுக நிர்வாகிகள் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு பொங்கல் மற்றும் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

இதில் மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் துரை தனராஜ் மற்றும் அதிமுக முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.,