• Sun. Feb 22nd, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

மதுரை விமான நிலையம் வந்தடைந்த துணை குடியரசுத் தலைவர்..,

ByKalamegam Viswanathan

Feb 22, 2026

மதுரை விமான நிலையத்தில் தமிழக அரசு சார்பில் அமைச்சர் பெரிய கருப்பன் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் அதிகாரிகள் உள்ளிட்ட 40 பேர் வரவேற்பு வழங்கினார்

டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் மதுரை வரும் துணை குடியரசுத் தலைவர் சி பி ராதாகிருஷ்ணனை மதுரை விமான நிலையத்தில் தமிழக அரசு சார்பில் வரவேற்க அமைச்சர் பெரிய கருப்பன், மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் மாநகர காவல் ஆணையர்கள் லோகநாதன் மாநகராட்சி ஆணையாளர் மற்றும்சிவகங்கை சமஸ்தானம் ராணி மதுராந்தக நாச்சியார் உள்ளிட்ட 25 பேரும்
பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநில பாஜக செயலாளர் பேராசிரியர் சீனிவாசன் மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள் மற்றும் மாவட்ட தலைவர்கள் உள்ளிட்ட 18 பேரும்மதுரை விமான நிலையத்தில் துணை குடியரசு தலைவருக்கு வரவேற்பு அளிக்கின்றனர்.

மதுரை விமான நிலைய வரவேற்பு நிகழ்ச்சி முடிந்த பின் துணை குடியரசுத் தலைவர் சி பி ராதாகிருஷ்ணன் ஹெலிகாப்டர் மூலம் சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய புறப்பட்டு செல்கிறார்.