• Thu. Jun 18th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

பிஷப் அப்பாசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழா..,

BySeenu

Feb 20, 2026

கோவை பிஷப் அப்பாசாமி கலை அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழா இன்று கல்லூரி வளாகத்தில்நடைபெற்றது. விழாவில் கல்லூரி செயலாளர் டேவிட் பர்னபாஸ் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் டாக்டர் ஜெமிமா வின்ஸ்டன் ஆண்டு அறிக்கை வாசித்தார்.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக இம்பாக்ட் இன்டர்நேஷனல் நிறுவன தலைவர் முரளி மேனன், கெளரவ விருந்தினராக கோவை மறைமாவட்ட தலைவர் பிஷப் எஸ்.பிரின்ஸ் கால்வின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து நடைபெற்ற விழாவில் இளம் கலை முதுகலை பி.எச்டி. மாணவர் மாணவிகள் மொத்தம் 750 பேருக்கு பட்டங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.அதனை சிறப்பு அழைப்பாளர்கள் முரளி மேனன், பிஷப் பிரின்ஸ் கால்வின் ஆகியோர் வழங்கினார்கள்.

விழாவில் கல்லூரி துணை முதல்வர் பால்சுதன் நிர்வாகிகள் முக்கிய பிரமுகர்கள் மற்றும் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டார்.