• Mon. Feb 16th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

பெருங்களத்தூரில் கழகத் தலைவர் பிறந்தநாள் விழா மாற்றுக் கட்சியிலிருந்து பலர் இணைப்பு..,

ByPrabhu Sekar

Feb 16, 2026

தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பெருங்களத்தூர் வடக்கு பகுதி மற்றும் 33வது வார்டு இணைந்து கழகத் தலைவர் பிறந்தநாள் விழா சிறப்பாக நடைபெற்றது.

4வது மண்டல குழுத் தலைவர் மற்றும் பகுதி கழக செயலாளர் திரு டி.காமராஜ் அவர்களின் ஏற்பாட்டில், வட்ட செயலாளர் திரு எம்.வினோத் அவர்களின் தலைமையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவிற்கு முன்னதாக, மாற்றுக் கட்சிகளான அ.ம.மு.க மற்றும் பா.ம.க ஆகிய கட்சிகளில் இருந்த பலர் விலகி தாய் கழகத்தில் இணைந்தனர்.

இதனைத் தொடர்ந்து, தாம்பரம் மாநகர செயலாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் திரு எஸ்.ஆர்.ராஜா அவர்கள் சிறப்புரையாற்றினார். கழகத்தின் வளர்ச்சி, மக்கள் சேவை மற்றும் ஒற்றுமையின் அவசியம் குறித்து அவர் வலியுறுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் தாம்பரம் மாநகராட்சி மேயர் திருமதி வசந்தகுமாரி, 5வது மண்டல குழுத் தலைவர் மற்றும் பகுதி கழக செயலாளர் திரு எஸ்.இந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

மேலும், மாமன்ற உறுப்பினர்கள் திரு சி.சுரேஷ், திரு எல்.பெரியநாயகம், திருமதி ரமணி ஆதிமூலம் உள்ளிட்டோர், மாவட்ட, மாநகர மற்றும் பகுதி நிர்வாகிகள், வட்ட நிர்வாகிகள், மாணவர் அணி, இளைஞர் அணி, மகளிர் அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், கழக முன்னோடிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

மேலும் பொது மக்களுக்கு சில்வர் பாத்திரங்களை நலத்திட்ட உதவியாக வழங்கி சிறப்பித்தனர்.