• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்..,

ByP.Thangapandi

Feb 13, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தொகுதிக்குட்பட்ட உசிலம்பட்டி, சேடபட்டி, செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு அதிமுக சார்பில் 100 நாள் வேலை திட்டத்தை மத்திய அரசு முடக்க முயல்வதாக பொய்யான குற்றச்சாட்டை முன் வைக்கும் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.,

உசிலம்பட்டியில் முன்னாள் எம்எல்ஏ நீதிபதி தலைமையிலும், சேடபட்டியில் மாநில அமைப்பு செயலாளர் மகேந்திரன் தலைமையிலும், செல்லம்பட்டியில் முன்னாள் எம்எல்ஏ தவசி தலைமையிலும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக, அமமுக உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளும், ஆயிரக்கணக்கான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

சேடபட்டியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அதிமுக மாநில அமைப்பு செயலாளர் இ.மகேந்திரன்.

திமுகவில் 10 ஆண்டுகளாக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், திமுகவிலிருந்து உடைந்து வெளியேற தயாராகி கொண்டிருக்கிறார்கள்., அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசுகிறார், இருந்தால் இருக்கட்டும், இல்லாட்டி போகட்டும் என சொல்கிறார்கள்.

ஆனால் கூட்டணி கட்சியை மதிக்கக்கூடிய ஒரே தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மட்டும் தான்., திமுக காங்கிரஸ் இருந்தா இருங்க இல்லையென்றால் போங்க என விரட்டுகிறார்கள்.,

நல்ல கூட்டணியை அதிமுக ஏற்படுத்தியுள்ளது, இந்த 100 நாள் வேலை திட்டத்தை 125 நாட்களாக உயர்த்தியுள்ளது மத்திய அரசு ஆனால் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக வந்தவுடன் 150 நாளாக உயர்த்துவதற்கு நாங்கள் பாடுபடுவோம்.

இன்று ஏதோ 5000 ரூபாய் வங்கி கணக்கில் ஏத்திருக்கார்னு மக்கள் சொன்னாங்க., எதற்கென்றால் இன்று அதிமுக 13ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்துகிறது, இந்த ஆர்ப்பாட்டத்தை நாம் ஏதாவது செய்து திசை திருப்ப வேண்டும் என்பதற்காக 5000 ரூபாய்., அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கே நீங்கள் ஒவ்வொருவருக்கும் 5000 கொடுக்க வேண்டியுள்ளது.

இன்று 5000 ரூபாய் வந்துவிட்டது என நினைக்க வேண்டாம், இன்னும் 5 மாததிற்கு 1000 ரூபாய் வராது, மொத்தமா அள்ளிப்போட்டு கொடுக்கவில்லை 5000 ரூபாயை, அடுத்த அரசு வந்து அமரும் வரை அந்த 1000 ரூபாய் வராது அதற்காக தான் கொடுத்திருக்கார்., என பேசினார்.