சிவகாசியில் அதிமுக மேற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி,

திமுக ஆட்சியால் என்மீது பொய் வழக்கு போடப்பட்டது, கைது செய்யப்பட்ட நேரத்திலும் இயக்கத்தின் பொறுப்பாளர்கள் என்னை அணுக முடியாமல் காவல்துறை அவர்களை கைது செய்தனர்.
அந்த நேரத்தில் எனக்கு ஆதரவு கொடுத்த ஒரே அமைப்பு கட்சியின் வழக்கறிஞர் பிரிவுதான்
வழக்கறிஞர் பிரிவு வலுவாக உள்ளது.
மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் மரண வழக்கு சிபிஐ விசாரணைக்கு சென்றதற்கு காரணமே விருதுநகர் மாவட்ட அதிமுக வழக்கறிஞர் பிரிவுதான்
அஜித் குமார் வழக்கில் சிபிஐக்கு செல்லக்கூடாது என தமிழக அரசு என உச்ச நீதிமன்றம் வரை சென்றது, சிபிஐக்கு சென்றதால் தான் வழக்கின் உண்மைத் தன்மை தெரியவந்துள்ளது.

தவறே நடக்காமல் போலியான புகார் அளித்து செய்யாத தவறுக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார். காவலாளி அஜித்குமாருக்கு திமுக ஆட்சி கொடுமை செய்துள்ளது.
செய்யாத தவறுக்கு அஜித் குமாரை வீதி வீதியாக, கண்மாய், மரங்களில் கட்டி வைத்து அடித்து துன்புறுத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.
சிபிஐ தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குற்றமே நடைபெறவில்லை என தெளிவாக தெரியவந்துள்ளது.
பொய்யான வழக்குகளை ஜோடிப்பது திமுக அரசுக்கு அன்றாட நடைமுறையாகிவிட்டது
தங்களை எதிர்ப்பவர்களை அழிக்க வேண்டும், தங்களுக்கு இடையூறாக இருப்பவர்களை ஒழிக்க வேண்டும் என நினைக்கும் ஆட்சிதான் திமுக ஆட்சி
திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் காலம் நெருங்கிவிட்டது
திமுக ஆட்சி இந்த தேர்தலோடு ஒன்றும் இல்லாமல் போய்விடும், திமுக படுதோல்வி அடையும், அதிமுக கோட்டையை நோக்கி செல்லும் வரப்போகும் ஆட்சி அதிமுக ஆட்சி எடப்பாடியார் தான் முதல்வர் அதில் எந்த சந்தேகமும் இல்லை

அதிமுக வெற்றி பெறும் என மக்கள் பகிரங்கமாக தெரிவிக்கிறார்கள், இந்த அளவிற்கு தமிழகத்தில் மக்கள் பேசி நான் பார்த்ததில்லை
அந்த அளவிற்கு தமிழக மக்களின் வெறுப்பை சம்பாதித்துள்ள ஆட்சியாக திமுக ஆட்சி உள்ளது
முதலமைச்சர் ஸ்டாலின் மீது தமிழக மக்களுக்கு நம்பிக்கை இல்லை, எடப்பாடி பழனிச்சாமி மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள்
எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி செய்த நான்கரை ஆண்டு காலத்தில் மக்களுக்கு தேவையான சட்ட திட்டங்களை நிறைவேற்றினார்
அவரது சட்ட திட்டங்கள் இன்று பேசு பொருளாகியுள்ளது
எடப்பாடி பழனிச்சாமி நாடாள வேண்டும் என்பது மக்கள் மத்தியில் பேசு பொருளாகியுள்ளது என்றார்






