• Fri. Feb 13th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகளை தானே கூப்பிடுகின்றனர்-சீனிவாசன் பேட்டி..,

ByVasanth Siddharthan

Feb 12, 2026

திண்டுக்கல்லில் எம்.வி.முத்தையா அரசு மகளிர் கலைக் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் நடத்தும் 4வது நாள் உள்ளிருப்பு போராட்டத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

பின் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது,

“கௌரவ விரிவுரையாளர்கள் அடிப்படை வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வந்துள்ளோம்.

அதிமுக சார்பிலும், அடுத்து முதல்வராக உள்ள எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் பிஜேபி மற்றும் கூட்டணி சார்பில் ஆதரவு தெரிவித்து இங்கு வந்துள்ளேன்.

UGC பரிந்துரைப்படி ஊதியம் வழங்க வேண்டும், மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் உட்பட 5 கோரிக்கைகளையும் வலியுறுத்தி கௌரவ விரிவுரையாளர்கள் 9ஆம் தேதி முதல் போராடி வருகின்றனர்.

இன்று வரை செவிடன் காதில் ஊதிய சங்காக அரசாங்கம் இருந்து கொண்டிருக்கிறது.

ஒன்றரை அமாவாசை முடிந்து பௌர்ணமி வருவதற்குள் ஆட்சி மாற்றம் நிச்சயம் வரும். உங்களது கோரிக்கை அனைத்தும் நிறைவேற்றப்படும் என அதிமுக எடப்பாடி பழனிச்சாமி சார்பில் கூறிக்கொள்கிறேன்.

கௌரவ விரையுரையாளர்கள் 15 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சி இருந்தது, 5 ஆண்டுகளாக திமுக ஆட்சி இருந்தது ஆனால் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்ற கேள்விக்கு

525 வாக்குறுதி கொடுத்திருக்கின்ற திமுகவை பார்த்து இந்த கேள்வியை கேட்க வேண்டும். இது யாருடைய கவனத்திற்கு தெரியவில்லை. தற்போது தான் என்னை அழைத்துள்ளனர். அப்போதே எங்களிடம் கூறியிருந்தால் திமுகவை தூங்க விட்டிருக்க மாட்டோம். அவர்களின் கோரிக்கையை செய்து கொடுக்க வந்துள்ளோம். கோரிக்கைகள் அனைத்தையும் கேட்டு செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

நான்கு ஆண்டுகளுக்குப் பின்பு தற்போது உங்களது கனவு என்னவென்று கூறுங்கள் என கேட்கின்றனர். திமுக ஆட்சி வீட்டுக்கு போக வேண்டும் என தற்போது ஆசிரியர்கள் கூறுகின்றனர். அழுத பிள்ளை தான் பால் குடிக்கும். இவர்களை விடுங்கள் அங்கன்வாடி ஆசிரியர்கள் என அனைவரும் போராடிக் கொண்டிருக்கிறது. ஜாக்டோ ஜியோவை வைத்து தனக்குத்தானே பாராட்டு விழா நடத்திக் கொண்டனர். எனது மகன் எனக்கு பாராட்டு கூறுவது போல் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர். திமுக மீது நம்பிக்கை இல்லாமல் தான் சகோதரிகள் போராடிக் கொண்டு வருகின்றனர்.

மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து இன்று திமுக ஆர்ப்பாட்டம் குறித்த கேள்விக்கு

நேற்று பாராளுமன்றத்தில் நேருக்கு நேராக அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் ஆணி அடித்தது போல் எதிர்க்கட்சிக்கு பதில் கூறியுள்ளார்.

காங்கிரஸ் ஆட்சியில் செய்த தவறுகள் எந்தெந்த காலத்தில் என்னென்ன தவறு செய்தார்கள். எத்தனை திட்டங்கள் விடுபட்டுள்ளது. அதை அனைத்தையும் பாஜக செய்துள்ளது. மோசமான ஆட்சி என்று கிழித்துவிட்டார் அனைவரும் வெளிநடப்பு செய்துவிட்டனர்.

தமிழகத்தில் திமுகவை தவிர யார் ஆட்சி அமைத்தாலும் அது டெல்லி ஆட்சி என ஸ்டாலின் கூறியது குறித்த கேள்விக்கு

டெல்லி ஆட்சியாக இருந்தாலும் இருந்துட்டு போகட்டும். ரயில் நிலையம் மற்றும் பத்து ரயில்கள் வேண்டுமென்றால் டெல்லியில் தான் கேட்க வேண்டும். அவர்களில் ஆத்தாவிடமா கேட்க முடியும். மத்திய அரசாங்கத்திடம் தான் மாநில அரசாங்கம் கேட்க வேண்டும்.

பாஜக தமிழிசை சௌந்தர்ராஜன் விஜய்க்கு அழைப்பு கொடுத்தது குறித்த கேள்விக்கு

திமுகவிற்கு எதிராக உள்ள அனைவரையும் கூப்பிட்டுக்கொண்டு இருக்கிறார்கள் தவறு இல்லை.

தற்போது போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகளை தானே கூப்பிடுகின்றனர். திமுக வந்தார்களா? வரமாட்டார்கள் நாங்கள்தான் வரவேண்டும்.

தமிழக முழுவதும் பல்வேறு போராட்டம் நடத்துவது குறித்த கேள்விக்கு

திமுக ஆட்சி ஒரு Unfit ஆட்சி, எதையும் செய்ய லாயக் (தகுதி) இல்லாத ஆட்சி, அதற்கு நீங்களே சாட்சி என தெரிவித்தார்.