• Fri. May 22nd, 2026
WhatsAppImage2026-05-15at0006252
previous arrow
next arrow
Read Now

மத்திய அரசு கொள்கைகளுக்கு எதிராக போராட்டம்..,

ByK Kaliraj

Feb 12, 2026

தேசம் தழுவிய பொதுவேலைநிறுத்தத்தின் ஒரு பகுதியாக, விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஆலங்குளம் முக்கு ரோட்டில் பரபரப்பான சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

மத்திய ஒன்றிய அரசின் தொழிலாளர் மற்றும் விவசாயிகள் தொடர்பான கொள்கைகளை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இந்த போராட்டம் நடைபெற்றது.

தொழிலாளர் சட்ட மாற்றங்கள், தனியார்மயமாக்கல் நடவடிக்கைகள், விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பு பற்றாக்குறை மற்றும் விவசாயிகள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு முழக்கங்கள் எழுப்பினர்.

ரோட்டில் அமர்ந்து மறியல் மேற்கொண்டதால், அந்தப்பகுதியில் சில நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்திற்கு எம். நடராஜன் தலைமையேற்று, எஸ். பெரியசக்கரை (AITUC) மற்றும் CITU மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். ஆலங்குளம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

போராட்டம் அமைதியான முறையில் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.