• Wed. Feb 11th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

இளைஞர்கள் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்ச்சி-கே. டி. ஆர் பேச்சு…

ByK Kaliraj

Feb 11, 2026

சிவகாசி அருகே விஸ்வநத்தம் கிராமத்தில், எந்த அரசியல் கட்சிகளையும் சாராத இளைஞர்கள் பலர் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிவகா சிவகாசி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் விஜய் ஆனந்த் முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட அதிமுக நிர்வாகிகளுடன் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதாவது:- இளைஞர்கள் 200- பேர்கள் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டு செயல்பட விருப்பது தீபாவளி போனஸ் போல அமைந்துள்ளது. என்னை நம்பி அதிமுகவில் இணைந்துள்ள இளைஞர்கள் ஊர்வாரியாக, பகுதி வாரியாக, தெரு வாரியாக தேர்தல் பிரச்சாரம் செய்யுங்கள். தமிழ்நாடு முழுவதும் உழைக்கின்ற மக்கள் திமுக ஆட்சியைத் தூக்கி எறிய வேண்டும் மென்று எண்ணுகின்றனர். இதற்கெல்லாம் பிள்ளையார் சுழி போடும் விதமாக சிவகாசி தொகுதியின் வெற்றியை நிர்ணயிக்கும் செயல்பாடு வி ஸ்வநத்தம் பகுதி மக்களின் மூலமாக இருக்க வேண்டும். பட்டாசு, தீப்பெட்டி அச்சுத் தொழிலுக்கு உறுதுணையாயிருந்து, சதிகளை எல்லாம் முறியடித்து, சிவகாசி வட்டாரப் பகுதிகளில் தொழில் வளம் பெருக அடிப்படைக் காரணமாக உதவியாக இருந்தவன்( கே.டி. ஆர்) ராஜேந்திர பாலாஜி என்பதை எல்லோரிடத்திலும் எடுத்துச் சொல்லுங்கள்.

என்னைப் பற்றி மக்களிடத்திலே நீங்கள் சொல்கின்ற கருத்துக்களை சிவகாசி தொகுதி மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். திமுக எம்பிக்கள் பட்டாசு தொழில் பிரச்சனை பற்றி நாடாளுமன்றத்தில் பேசி உள்ளனரா? பேசியதே கிடையாது. மக்களின் வாக்கு மட்டும் ஓசியாக வேண்டும். ஆனால் வாக்களித்த மக்களுக்கு திமுக கூட்டணிக் கட்சியினர் எதுவும் செய்ய மாட்டார்கள். காங்கிரஸ் கட்சி மிட்டா- மிராசுதாரர் களுக்கான கட்சி. ஏழை -எளிய மக்களுக்கான கட்சிகளாக காங்கிரசும், திமுகவும் இருக்கவில்லை. சிவகாசி வட்டாரத்தின் தொழில்களை, தொழிலாளர்கள் நலனைப் பாதுகாக்க சிவகாசி சட்டமன்றத் தொகுதியில்( கே. டி. ஆர்) ராஜேந்தர் பாலாஜி வெற்றி பெறுவது முக்கியமென்பதை இளைஞர்கள் மக்களிடையே எடுத்துச் சொல்ல வேண்டும். மக்களை சிரமப்படுத்தும் இந்த திமுக ஆட்சி வேண்டுமா? என்பதையும், யார் ஜெயிக்க வேண்டு மென்பதையும் மக்களிடையே எடுத்துச் சொன்னால் சிவகாசி தொகுதி மக்கள் நம்முடைய கருத்தை ஏற்றுக் கொள்வார்கள்.

அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடுகின்ற ( கே. டி.ஆர்) ராஜேந்திர பாலாஜிக்கு ஓட்டு போடுங்கள் என்று கண்டிப்பாக மக்களிடையே சொல்லுங்கள். நான் முன்பு அமைச்சராக இருந்த காலத்தில் அகந்தையோடு- அகம்பாவத்தோடு யாரிடமும் நடந்தது கிடையாது. விருதுநகர் மாவட்ட மக்களின் குறைகளைப் போக்க எனது வீட்டுக் கதவுகள் எப்போதும் திறந்தே யிருக்கும். எனது படுக்கை அறை வரை வந்து கூட கட்சி நிர்வாகிகளும், பொதுமக்களும் என்னை சந்திக்கலாம். அந்த ளவுக்கு நான் சேவை மனப்பான்மையுடன் இருக்கக்கூடியவன் என்பதை மக்களிடையே எடுத்துச் சொல்லுங்கள். என்னிடத்தில் குறைகளைக் கூற வருபவர்களுக்கு முடியும் அல்லது முடியாது என்பதையும், குறையைத் தீர்க்க எத்தனை நாளாகும் என்ற கருத்தையும் அப்போதே விடையளித்து விடுவேன். என்னால் இயன்ற அளவுக்கு ஜாதி- மத பாகுபாடின்றி அனைத்துக் கோவில்களுக்கும், அன்னதானம் செய்வதற்கும், கோவில்களின் திருவிழாக்களுக்கும், பாதயாத்திரை செல்பவர்களுக்கும், ஆன்மீகப் பணிகளுக்காகவும் நிதி உதவி செய்து வருகிறேன்.

கடவுள் மீது நம்பிக்கை வைத்து அரசியல் வாழ்க்கை நடத்தக்கூடியவன் நான். மனிதனை நம்புகிறோமோ! இல்லையோ!!- கடவுளை நம்ப வேண்டும். கடவுளை நம்பினால் மனிதர்கள் நம்மிட மிருப்பார்கள். சிவகாசி தொகுதி மக்களின் வளர்ச்சிக்காக பாடுபட உறுதியளிக்கிறேன். இரட்டை இலைக்கு வாக்களியுங்கள். எடப்பாடிப் பழனிச் சாமியை முதல்வராக்குங்கள். என்றார்.

இதற்கான ஏற்பாடுகளை விஸ்வநத்தம் இளைஞர்கள் சார்பில் லட்சம் செய்திருந்தார்