• Wed. Sep 16th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்ட ஆர் பி உதயகுமார்..,

ByKalamegam Viswanathan

Feb 10, 2026

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் ஊராட்சியில் அதிமுக மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் சார்பில் திண்ணைப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் கலந்துகொண்டு பெண்களிடம் அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து விளக்கங்கள் கூறி வாக்குகள் சேகரித்தார். இந்த நிகழ்ச்சிக்கு வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமை தாங்கினார். முள்ளி பள்ளம் ஊராட்சி செயலாளர்கள் சேது பரமசிவம் சந்திரன் முருகானந்தம் மாவட்ட பிரதிநிதி பாண்டியம்மாள் ராமநாதன் மற்றும் முல்லை சக்தி ஆகியோர் வரவேற்றனர்.

முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம் ஒன்றிய செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் பேரூர் செயலாளர் முருகேசன் துணைச் செயலாளர் தியாகு பொதுக்குழு உறுப்பினர் நாகராஜ் விருகை தருமர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் தகவல் தொழில் நுட்ப அணிசிங்கராஜ் பாண்டியன் முன்னாள் ஒன்றிய கவுன்சிலரகள் தென்கரை ராமலிங்கம் கருப்பட்டி தங்கபாண்டி நாச்சிகுளம் தங்கப்பாண்டி அவைத் தலைவர் கச்சிராயிருப்பு
முனியாண்டி ஊத்துக்குளி சண்முகம் தென்கரை ஊராட்சி செயலாளர் முருகன் ஜெயக்குமார் மன்னாடிமங்கலம் ராஜபாண்டி ராமு முன்னாள் தலைவர் ரங்கநாதன் குருவித்துறை காசிநாதன் விரும்பப்ப ராஜன் வடகாடு பட்டி பிரபுசோழவந்தான் பேரூர் நிர்வாகிகள் துரை கண்ணன் ஜெயபிரகாஷ்உமா மாரி வெல்டிங் மாரி ஜேசிபி சுரேஷ் வைகை ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். இளைஞர் அணி மாவட்ட இணைச்செயலாளர் கேபிள் மணி நன்றி கூறினார் இதில் கூட்டணி கட்சியான பாரதிய ஜனதா கட்சி சார்பில் முத்துப்பாண்டி முருகேஸ்வரி செல்வி மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பாட்டாளி மக்கள் கட்சி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து முள்ளிப்பள்ளம் ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடந்து சென்று திமுக ஆட்சியின் அவலங்களை எடுத்துக் கூறியும் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ள தேர்தல் வாக்குறுதிகள் குறித்து பொதுமக்களிடத்தில் எடுத்துக் கூறியும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதில் முள்ளிப்பள்ளம் கிளைக் கழகத்திற்கு உட்பட்ட நிர்வாகிகள் பொதுமக்கள் மற்றும் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.