• Sat. Apr 4th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

விவசாயத்தில் ஆர்வம் காட்டும் மாணவ, மாணவிகள்..,

ஒரு லட்சம் விதைப்பந்துகள் தயாரிப்பு..!
டைம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விதைப்பந்து திருவிழா..!
ஆரைகுளம் டைம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விதைப்பந்து திருவிழாவில், மாணவ,மாணவியர் ஒரு லட்சம் விதை பந்துகள் தயாரித்து சாதனை புரிந்தனர்.

டைம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் முகமது ரியாஸ் முன்னெடுப்பில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு பள்ளியின் இயக்குனர் ஹாஜா செரீப் தலைமை தாங்கினார். துணை முதல்வர் வேல்முருகன் முன்னிலை வகித்தார். சமூக ஆர்வலர் வெங்காடம்பட்டி திருமாறன் விதைப்பந்து தயாரிக்கும் நிகழ்வினை துவக்கி வைத்தார். ஹரி பிரியாணி ஹரிஹர செல்வன்,பல் மருத்துவர் ஏகலைவன் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

பள்ளியின் மாணவ, மாணவியர் , குறுகிய நேரத்தில் ஒரு லட்சம் விதைப்பந்துகளை தயாரித்து சாதனை படைத்தனர். நிகழ்ச்சியினை மூரான் யுசூபி, சகரியா அல்தாபி, மீரான் தாவூதி, அஜிஸ் கஷ்சிபி, நசீப் அலி, அமீர் சுல்தான், மற்றும் திருமதி . முன்தாகா, சுபஹானி, ,ஹமீதா பானு, சையது மீரா உம்மாள், சப்ரூல் பர்வீன் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். விதைப்பந்துகள் தயாரித்த மாணவ, மாணவியர் மற்றும் துணை நின்ற ஆசிரியர்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.