• Fri. Apr 3rd, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

மதுரை விமான நிலையம் வந்த முதல்வருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு..,

ByKalamegam Viswanathan

Feb 7, 2026

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெறும் தென் மண்டல இளைஞரணி மாநாட்டில் பங்கேற்பதற்காக திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து தனி விமான மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைத்தார்.

மதுரை விமான நிலையத்தில் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பளித்தனர். மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பாக மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார், மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன், மாநகர காவல் ஆணையாளர் லோகநாதன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

மேலும் முதல்வருடன் அமைச்சர்கள் மூர்த்தி, பி.டி.ஆர், தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர், ராஜகண்ணப்பன் ஐ.பெரியசாமி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சபரீசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். மதுரை விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்டு சிந்தாமணி பகுதியில் உள்ள மாலை 4:30 மணி அளவில் விருதுநகர் மாவட்டம் சென்று அங்கு நடைபெறவுள்ள தென் மண்டல திமுக இளைஞரணி மாநாட்டில் கலந்து கொள்கிறார்.

அதை முடித்துக் கொண்டு மீண்டும் சாலை மார்க்கமாக விருதுநகரில் இருந்து மதுரை விமான நிலையம் வந்தடைந்து 7:30 மணியளவில் மதுரையில் இருந்து தனி விமானம் மூலமாக மூலம் சென்னை செல்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.