• Fri. Feb 6th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

எய்ம்ஸ் மருத்துவமனை பிரதமர் திறந்து வைப்பதாக வந்த தகவலுக்கு அனுமந்த ராவ் மறுப்பு..,

ByKalamegam Viswanathan

Feb 6, 2026

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை முதல் கட்டமாக வருகிற பிப்ரவரி 28ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைப்பதாக தகவல் வெளியான நிலையில் அது குறித்து மதுரை எய்ம்ஸ் நிர்வாக இயக்குனர் அனுமந்த் ராவ் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்:

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை வருகிற 28ஆம் தேதி பிரதமர் திறந்து வைப்பதாக வெளியாகி உள்ள தகவல் உண்மை இல்லை. திட்டமிட்டபடி பணிகள் நடைபெற்று வருகிறது. பாதாள சாக்கடை மற்றும் தீயணைப்பு பாதுகாப்பு போன்றவற்றிற்கு தமிழக அரசிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது.

இராமநாதபுரத்தில் பயிலும் மதுரை எய்ம்ஸ் நான்காம் ஆண்டு மாணவர்கள் இரண்டு பேட்ச்சுகளும் மதுரைக்கு மாற்ற திட்டமிட்டுள்ளோம் அவர்களுக்கு வகுப்பறை ஆண்கள், பெண்கள் என மாணவர்கள் விடுதிகள் தயாராக இருக்கும். அதைத் தொடர்ந்து ஜூன் மாதம் புறநோயாளி பிரிவு தயாராகும் என எதிர்பார்க்கப்படுவதாக மதுரை எய்ம்ஸ் நிர்வாக இயக்குனர் அனுமன் ராவ் தெரிவித்தார்.